Rasi Palan This Week: மிதுன ராசிக்கு காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்.. இந்த வார இறுதி பட்டையை கிளப்பும்
Rasi Palan This Week: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு விரயங்கள் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபங்கள் இல்லாமல் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். நீண்ட நாட்களுக்குப் பிறகு குரு மாற்றம் ஜென்மத்தில் இருந்து மாறுவதால் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
மாற்றம் முன்னேற்றம்
லாபம், அனுகூலம் ஏற்படும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். எல்லா விதமான நன்மைகளும் காணப்படும். தொழில் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், வேலையாட்கள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சிக்கல்கள் தீரும்.
லாபம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். அபாரமான முன்னேற்றங்கள் காணப்படும். எல்லா காரியங்களும் கைகூடும். வாரத்தின் இறுதிப்பகுதி அருமையாக இருக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருள் லாபம், தன பிராப்தம், நம்பிக்கை கூடுவது போன்ற யோகம் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் தீரும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, கிரகப்பிரவேஷம் செய்வது, வண்டி, வாகனம் வாங்குவது, பதவிகள் தேடி வருவது யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. திருமண யோகம் உண்டாகும். காதல் விஷயங்கள் கைகூடும். புதிய உறவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கம்மல், கேஜெட்ஸ் போன்றவற்றை வாங்குவீர்கள். எதிர்பாலினத்தவர், வண்டி வாகனங்களில் மட்டும் கவனம் தேவை.
வழிபாடு
அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் காலகட்டம். சவால்கள், பாதிப்புகள் நீங்கும். .சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும். விஜயலட்சுமி தேவி வழிபாடு அற்புதமான ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும். அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications