வார ராசி பலன்: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. வெளிநாட்டு யோகம், பழைய கடன்கள் தீரும் வாய்ப்பு
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் உண்டாகும். கடல் கடந்து பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். திடீரென லாட்டரியில் பரிசு விழும்.
வெளிநாடு யோகம்
யோக பலன்கள் கிடைக்கும். மற்றவர்கள் முதலீடு செய்து உங்களை வெளிநாடு அழைத்து செல்லும் யோகம் உண்டு. திடீரென தொழில் சாம்பிராஜ்யத்தை நிர்வகிக்கும் யோகம் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களுடன் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற அமைப்பு உள்ளது. குடும்பம் பிரிந்து நீதிமன்றம், வழக்குகள் போட்ட நிலைமை எல்லாம் மாறி இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
கடன் தீரும்
மதிப்பு, மரியாதை உயரக்கூடிய சூழல் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். அரசியல்வாதிகள், அரசுத் துறையினர் பெரிய பொறுப்புகளுக்கு வருவார்கள். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறுகள் வரும் வாய்ப்புள்ளது.
முன்னேற்றம்
முதுகு வலி, ரத்த அழுத்தத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் கவனம் தேவை. அப்பாவுடன், மேலதிகாரிகளுடன் தகராறு வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் மனதை தேத்திக் கொண்டு மீண்டும் வேகமாக செயல்படுவதற்கான அமைப்பு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும்.
வழிபாடு
துர்க்கை வழிபாடு ஏற்றத்தைத் தரும். துர்க்கை காயத்ரி, துர்க்கை கவசம் கேட்பது அற்புதமான அமைப்பைத் தரும். சுப காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் ஏற்படும். கோர்ட், கேஸ் என சென்றவர்கள் கூட மீண்டும் இணையும் அமைப்பு உள்ளது. குடும்பத்துடன் யாத்திரை மேற்கொள்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
