அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ரிஷப ராசி.. இந்த வாரத்தில் காத்திருக்கும் குட்நியூஸ்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும் நல்ல பலன்களைக் கொடுக்கும். 6 ஆம் இடத்தில் புதன் இருப்பதால் கடன் அடையும். புதிதாக வேலை கிடைக்கும். 7 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய் பார்வையில் இருக்கிறார். 4 ஆம் இடத்தில் கேது, குரு, செவ்வாய் இணைவதால் இருதயம், மார்பகம் தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது.
மன மகிழ்ச்சி
அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் அம்மா, அப்பா உங்களுக்கு எதிராகவும், புரிந்து கொள்ளாமலும் இருப்பார்கள். சூழ்நிலை சரியில்லாததால் எல்லா விஷயங்களிலும் நேர்மையாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலமாக கவலைகள், அன்புத் தொல்லைகள் ஏற்படும். வாரத்தின் இறுதிப் பகுதி மனமகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும்.
தொழில்
கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கார்த்திகை 1 ஆம் தேதி கண்டிப்பாக பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது, நெய் தானமாகக் கொடுத்து வழிபாடு செய்வது, பசுவைக் கும்பிடுவது நன்மை பயக்கும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு பெயர், புகழ் கிடைக்கும். கம்பியூட்டர் துறை, வேலையில் கஷ்டப்படுபவர்களுக்கு இனி நல்ல காலகட்டமா இருக்கும்.
லாபம் கொட்டும்
குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய காலகட்டம்.
வழிபாடு
இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வீடு வாங்குவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டு. தெய்வமார்க்க பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிரிகளிடம் மிகுந்த கவனம் தேவை. மன பாரம் கண்டிப்பாக குறையும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்ரத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
