Simmam: பணக்கார யோகம் பெறும் சிம்ம ராசி.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-simmam-rasi-people-get-this-week

சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றமும் நம்பிக்கையும் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களிடம் பழகுபவர்களை சந்தேகம் கொள்ள வேண்டும். துணையிடம் தேவையில்லாமல் சண்டை போட்டு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

வீடு, நிலம் யோகம்

பெற்றோர், பெரியோருக்கு யோக பலனும், நம்பிக்கையும் ஏற்படும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் பலம் கொண்டு இருக்கிறார். எல்லா காரியங்களையும் செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். தங்கை, தம்பிக்கு இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய விஷயங்கள் சாதகமாக முடியும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட அனுகூலம் ஏற்படும்.

யோக பலன்கள்

உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக யோக பலன்கள் கிடைக்கும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கணவன், மனைவிககுள் உறவு மேம்படும். தங்கம், வெள்ளி வாங்கும் யோகம் உண்டாகும். அரசு சீட் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் இருந்து யோகமான காலகட்டமாக இருக்கும். மனநிம்மதி, சந்தோஷம், திருப்தி உண்டாகும். செட்டிலாகும் யோகம் ஏற்படும்.

தொழில்

பெண் குழந்தைகள் பிறக்கும் யோகம் ஏற்படும். இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்லைன், அக்கவுன்டன்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும். சிவன் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும். விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள் மலைக் கோயில்கள் வழிபாடுகள் உண்டாகும்.

வழிபாடு

மகான்கள் தரிசனம், மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். முதுகு வலி, பாத வலி, கால் வலி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் வீண் ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளைப் பற்றி வருத்தப்பட்டு உங்களை வருத்திக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். சுக்கிரன் பார்ப்பதால் 3, 4, 5 ஆம் தேதிகள் நன்றாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+