Thulam: கடனை அடைக்கப் போறீங்க.. கைநிறைய பணம் வரப்போகுது.. துலாம் ராசிக்கு சூப்பர் வாரம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-thulam-people-get-from-november-15-to-22

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அமோகமான வாரமாக இருக்கும். ராசி லக்னத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். மொழிகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடுகளில் முதலீடு செய்வீர்கள். பல் பிரச்சனை ஏற்படும். பல், முகத்தில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெரிய நபர்களின் தொடர்பு கிடைக்கும்.

பண வரவு சூப்பர்

பணம், பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். எல்லாவற்றையும் சரியாக செய்யும் வகையில் முடிவுகள் ஏற்படும். விரயத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். வெளியூரில் இருந்து பணம், முதலீடுகள் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். எந்த விஷயத்தையும் கோபப்படாமல் பேசுவது நன்மை பயக்கும்.

பேச்சில் இனிமை

வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனம் தேவை. வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். துணைக்கும் உங்களுக்கும் இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். நண்பர்களுடன் செல்வது, வெளியிடங்களுக்குச் செல்லும் அமைப்பு.

சிக்கல் தீரும்

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நன்மைகள் நடக்கும். சிக்கல்கள் எல்லாம் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். யோகத்தை பெற்றுத் தரக்கூடிய காலகட்டம். உறவினர்கள், நண்பர்கள் வருகை ஏற்படும். எல்லா விஷயத்திலும் மேன்மையைக் காண்பீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். உறவுகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு

யாருக்கும் வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்கு கொடுத்தால் அந்த விஷயம் நடைபெறுவது கஷ்டம். புதன் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதால் அடுத்த வாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். சுக்கிரனும் வருவதால் நல்ல காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் அற்புதமாக இருக்கும். காதல், நட்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பெருமாள், அம்பாள் வழிபாடு ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+