Viruchigam: விருச்சிக ராசியை தேடி வரும் திடீர் அதிர்ஷ்டம்.. சொத்து சேரும் சூப்பர் வாரம்
வார ராசி பலன்: நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் இந்த வாரம் பிறக்கவுள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 30 ஆம் தேதி முதல் கார்த்திகை 6 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். வேற்று மொழி மனிதர்களால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். திடீரென வெற்றிகளைக் குவிப்பீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். லாபத்திற்கான அமைப்பு ஏற்படும்.
தானம்
இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் துணையிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த இரு மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் உணவு தானமாகக் கொடுப்பது, அல்லது எலுமிச்சை சாறு ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.
கவனம்
பெரியளவுக்கு நம்பிக்கை ஏற்படும். மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது வேகத்தை தவிர்ப்பது, விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை கூறி சிக்கலில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது.
உதவி கிடைக்கும்
வீட்டில் யாருக்காவது அறுவை சிகிச்சை, வீட்டில் இருப்பவர்களுக்கு அடிபடுவது போன்ற நிலைமை உள்ளதால் கவனம் தேவை. வாரத்தின் 2 ஆம் பகுதியில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் நண்பர்கள், தோழிகள், மூத்தவர்கள் மூலமாக நல்லவை நடக்கும். பொருளாதாரம், பணம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
வன்மம் வேண்டாம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஒற்றை தலைவலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயங்களும் தள்ளிப்போய் தாமதமாக நடக்கும். வன்மத்தை கொட்டுவதால் எந்தவொரு பிரயோஜனும் இல்லை என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
சிவனுக்கு அபிஷேகம் செய்வது, தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது பெரிய மாற்றத்தையும், சந்தோஷத்தையும் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். நரம்பு, கண், மயக்கம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது மேன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
