மீன ராசிக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. 108 நாட்களில் வரும் அற்புத மாற்றம்
மீனம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசி, லக்கினக்காரர்களுக்கு சனி வக்கிர கதியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் 25 ஆம் தேதி வரை இருக்கிறது. பின்னர் வக்கிர நிவரத்தியாகும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். உங்களுக்கு குழந்தை பிறக்கும். உங்களுடைய வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் நிறைய சுப காரியங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.
திருமணம்
திருமணங்களை முன்னின்று நடத்துவீர்கள். முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். பயங்கரமான சந்தோஷங்கள் உண்டாகும். பெரிய ஏற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்கள் உண்டாகும். எவை எல்லாம் முடியாதென்று சொன்னாமோ அவற்றை எல்லாம் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
ஆன்மீக சிந்தனை
நல்ல எண்ணங்கள் வரும். நிறைய ஆன்மீக சிந்தனைகள் வரும். ஆன்மீகம் சார்ந்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். சிவ ஸ்தலங்களுக்குச் சென்று தொண்டாற்றி வருவீர்கள். காசி, கயா, ராமேஸ்வரம், திவ்ய தேசங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும். நல்ல மாற்றங்களைக் கொடுக்கும். நிறைய பேர் வெளியூர் சென்று வருவீர்கள். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள்.
தோஷம் நீங்கும்
துலாம் மாதத்தில் முக்கியமானது புனித ஸ்நானம். புண்ணிய நதிகளில் நீராடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும். மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய ஏற்றங்கள் ஏற்படும். மன சங்கடங்கள் நிவரத்தியாகும். அதிர்ஷ்டமே இல்லை என்பவர்கள் அதிஷ்டத்தைப் பெறுவீர்கள்.
வழிபாடு
புதிய தொழில், வியாபாரம், உத்தி என அனைத்துமே மாறும். வேலையில் கெட்டிக்காரர்களாக மாறுவீர்கள். அடுத்த 108 நாட்கள் பெரிய மாற்றத்தைப் பெறுவீர்கள். ஆனந்தம், சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது. மீனாட்சி, சுந்தரேஷுவரரை மனதார வழிபடுவது நன்மையைத் தரும். வேலையில், தொழிலில், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications