ஆடி மாத பலன் 2026: ராஜயோகம் பெறும் ரிஷப ராசி.. இனி உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு, சனி, ராகு, கேதுக்கள் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து வருட பலன்கள் சொல்லப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறையும், குருப்பெயர்ச்சி 12 முதல் 13 மாதங்கள் வரைக்கும் குருவின் நிலையை வைத்தும் கணிக்கப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் நிலையை வைத்து மாதப்பெயர்ச்சி கணிக்கப்படுகிறது.

rishabam-rasi-aadi-month-horoscope-2026-rishabam-rasi-people-will-get-good-fortunes-during-this-mon

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் கடக வீட்டில் இருக்கப் போகிறார். கடகத்தோடு சூரியன் சுபத்துவத்தோடு இருக்கும் தன்மை மிகப்பெரிய யோகத்தைத் தரும். சூரியதிசை, சூரிய புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆடி மாதத்தின் நடுப்பகுதியில் அதவாது ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் குரு நீச்சமடைகிறார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய் ரிஷப வீட்டில் இருந்து மிதுனத்திற்கும், புதன் பகவான் ஆடி மாதம் 3 ஆம் வாரத்தில் சூரியனோடும், குருவோடும் சேரும் அமைப்புள்ளது. அந்த வகையில், ஆடி மாதத்தில் ரிஷப ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு ஆடி மாதத்தில் முதல் 15 நாட்கள் 4 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய ராசிநாதனாகிய சுக்கிரன் பிற்பகுதி 15 நாட்கள் 5 ஆம் இடத்தில் நீச்சம் என்ற அமைப்போடு சனியின் பார்வையில் வருகிறார். அதனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதை எடுத்தாலும் செய்து விடலாம் என்கிற வகையில் அவ்வளவு வேகத்துடன் செயல்படுவீர்கள். பிற்பகுதி 15 நாட்களில் அப்படியே வேகம் குறையத் தொடங்கும்.

முன்னேற்றம்

உணர்வுகள், உறவுகள் ரீதியான பிரச்சனை, குடும்ப பிரச்சனை ஏற்படும். பண விஷயத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். தடங்கல்கள் வராத அமைப்பு ஏற்படும். 7 ஆம் அதிபதியான செவ்வாய் 2 ஆம் இடத்திற்கு வருகிறார். இதனால், மனைவியால் லாபம், கணவனால் லாபம் உண்டாகக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். கணவருக்கு வேலை, மனைவிக்கு வேலை, இரட்டை வருமானம் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்.

சொத்து சேரும்

மனைவி வழி சொந்தங்கள் மூலமாக எந்தவொரு பலனும் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆடி மாதத்தின் பிற்பகுதியில் நல்ல அமைப்பு ஏற்படும். பிறந்த வீட்டில் இருந்து சீர்வரிசைகள், சொத்துகள் வந்து சேரும். பிற்பகுதி 15 நாட்கள் தன்னம்பிக்கை இல்லாத நிலை ஏற்படும். நல்ல தகவல்கள் வந்து சேரும். ராசிநாதன் நீச்சத்தை அடைந்து பாவத்துமாக இருக்கிறார்.

பணவரவு

பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது, பணம் வந்து கொண்டே இருக்கும். இருப்பினும், அது நடக்கவில்லை, இது நடக்கவில்லை என்று யோசித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும். 2 ஆம் இடத்தில் செவ்வாய், 11 ஆம் இடத்தில் சனி இருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். பாக்கிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலிமையாக இருக்கிறது.

ஆன்மீகம்

சூரியன் 3 ஆம் இடத்தில் வலிமையாக இருப்பதால் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் வந்து சேரும். அப்பாவுடன் முரண்பாடு, அப்பா சொத்து கிடைக்காத நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். ஆன்மீக எண்ணங்கள் மிகவும் அதிகரிக்கும். குருவுடன், சுக்கிரன் சேர்ந்து பார்ப்பதால் ஆன்மீக எண்ணங்கள், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+