லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. மே மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. பணவரவு சும்மா கொட்டும்

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

rishabam-may-horoscope-2026-growth-challenges-key-predictions-for-rishabam-rasi-people

ரிஷபம் (Rishabam Rasi Palan)

ரிஷப ராசியினருக்கு அட்டகாசமான மாதமாக இந்த மே மாதம் அமையும். ராசிநாதன் உங்கள் ராசியிலேயே வலுவாக இருப்பதால் மிக அற்புதமான அமைப்பு ஏற்படும். 2 ஆம் இடத்தில் குரு, 11 ஆம் இடத்தில் சனி இருப்பது யோகத்தை தரும். தொட்டது துலங்கக்கூடிய இனிய மாதமாக அமையும். தானதிபதியாகிய புதன் நீசமாகி இருந்ததால் கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். பண விஷயங்களில் கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள்.

பண வரவு கொட்டும்

இந்த மாதம் 12 ஆம் இடத்துக்கு புதன் மாறினாலும், நீச நிலையில் இருந்து வெளிவருவதால் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். கெளரவம் உயரக்கூடிய அமைப்பு ஏற்படும். அந்தஸ்து, கெளரவம், மதிப்பு கூடும். கெளரவம் இழந்துவிட்டதாக, பெயர் கெட்டுவிட்டதாக நினைத்தவர்களுக்கு அதில் இருந்து மீண்டு வரக்கூடிய அமைப்பு ஏற்படும்.

காதல் குஷி

சோஷியல் மீடியாக்கள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். அதில் நல்ல சம்பாத்தியம் காணும் அமைப்பு உள்ளது. இளம் பருவத்தினருக்கு காதல் கைகூடும். ராசியில் சுக்கிரன் இருந்து 7 ஆம் இடத்தைப் பார்க்கிறது. 7 ஆம் அதிபதி மே 11 ஆம் தேதிக்குப் பிறகு 11 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் காதல் வரக்கூடிய அமைப்பு உள்ளது. காதலர்களுக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பீர்கள். காதலில் செலவுகள் இருக்கும் தன்மை ஏற்படும்.

தொட்டது துலங்கும்

இளம் வயதினருக்கு தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எதிர்ப்புகள், எதிரிகள் இல்லாமல் போகும் அமைப்பு உள்ளது. சிலருக்கு சட்டப் போராட்டங்கள், காவல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகம் உண்டாகும். துக்கம், துயரம் இல்லாத அற்புதமான மாதமாக இருக்கும். தந்தையால் நன்மைகள் பெறும் காலகட்டாக இருக்கும்.

சொத்துகள் கிடைக்கும்

தந்தை வழி சொத்துகளை அனுபவிக்க முடியாதவர்கள், சொந்த ஊர் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்காமல் இருந்த நிலைமை எல்லாம் மாறக்கூடிய யோகம் நிறைந்த மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+