Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு நினைத்தது வெற்றி பெறும் யோகம்.. பண வரவு அட்டகாசமா இருக்கும்
Rishabam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் ரிஷபத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். உடனிருப்பவர்கள் அவப்பெயர் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். பெரிய சிக்கல்கள் ஏற்படும். பொறுமையாக இருந்தாலே நிறைய காரியங்கள் வெற்றி பெறும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வார்த்தையில் மட்டும் மிகுந்த கவனம் தேவை.
லாபம், அனுகூலம்
நிறைய விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றபடி லாபம், அனுகூலம், பணவரவு ஏற்படும். எல்லா விதமான மன கவலைகளும் நீங்கும். நினைத்த காரியங்கள் நன்றாக நடைபெறும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
ஆரோக்கியம்
தேவையில்லாத பிரஷர், டென்ஷன் குறையும். உடல்நல பாதிப்புகளில் இருந்து நீங்கள், உங்கள் பிள்ளைகள் வெளிவருவீர்கள். இந்த வாரம் குளிர்ச்சியான பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த முடிவுகளை எடுத்தாலும் வெற்றி உறுதியாகும். படிப்பு, எழுத்து, கணக்கு, புள்ளியியல், நர்சிங் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
வருமானம்
முன்னேற்றமும் நம்பிக்கையும் அதிகரிக்கும் காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்களில் நல்ல மாற்றங்கள் தோன்றும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். வருமானம் மெதுவாக அதிகரிக்கும். சில எதிர்பாராத செலவுகள் இருக்கலாம், ஆனால் சரியான திட்டமிடலால் சமாளிக்க முடியும்.
வழிபாடு
நீங்களும், உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நன்றாக இருக்கக்கூடிய நிலைமை ஏற்படும். பெரிய பெரிய ஆர்டர்கள், ஆஃபர்கள் வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு செய்வது யோகத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். அலர்ஜி தொடர்பான விஷயங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications