Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீங்க
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், படிப்பு மாற்றம், மனை மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் அதிகளவில் இருக்கும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
மற்றவர்கள் விஷயத்தில் கவனம்
அதேபோல, மற்றவர்கள் உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய ராசிகளில் நீங்களும் ஒருவர். செல்வாக்குகள் கூடும். இழந்த பெருமைகளை மீண்டும் பெறக்கூடிய யோகம் ஏற்படும். ஆணாக இருந்தால் பெண்கள், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தடுத்து நல்லது நடக்கும் காலகட்டமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். யோக பலத்தை அதிகளவில் பெறுவீர்கள்.
அனுகூலம்
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். ரத்த பந்த உறவுகளில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தாய் தந்தை வழி உறவுகளில் மேன்மை ஏற்படும். வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் நல்ல காலகட்டம்.
மன அழுத்தம்
தூக்கத்தை கெடுத்துக் கொண்டு பிரஷர் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் அதீதமாக யோசித்துக் கொண்டே இருக்காமல் இருப்பது நல்லது. மன அழுத்தம் அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பில் என என்ன மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் மாறும். எல்லா விஷயங்களிலும் அபிவிருத்தி உண்டாகும். மிதுன ராசியினருக்கு மகான்கள் தரிசனம் உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications