Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கனவுகள் பலிக்கப் போகுது.. 7 நாளில் குட் நியூஸ் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-that-rishabam-taurus-signs-will-get-from-october-6-to-12

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை தவிர்ப்பது நன்மையைத் தரும். நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த தேக ஆரோக்கியப் பிரச்சனைகள் தீரும். அதற்கான உரிய மருத்துவத்தைப் பெறுவீர்கள். நிம்மதி பெருமூச்சு விடும் நேரமாக இருக்கும். மனதில் பயம் நீங்கும். வெளியூர்களுக்கு செல்லும் யோசனைகள் வரும்.

பதவி உயர்வு

மனதில் இருந்து வந்த பயம் எல்லாம் தீரும். மருத்துவர் சொன்ன பரிசோதனையை செய்யலாமா, வேண்டாமா என்கிற குழப்பம் எல்லாம் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். வழக்குப் போன்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

அனுகூலம்

குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ரீதியான அனுகூலங்கள் காணப்படும். யோக பலம் அதிகளவில் கிடைக்கும். பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள், சங்கடங்கள் தீரும்.

கனவு நிறைவேறும்

முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. வண்டி, வாகனங்களில் அனுகூலம் காணப்படும். வாகனத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். அற்புதமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் செய்யும் தவறுகளை தட்டிக் கொடுத்துச் செல்வது நல்லது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

வழிபாடு

கழிவுப் பாதை, கழுத்துப் பகுதியில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் பெருமாள், தாயாரை வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு மேன்மையைத் தரும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை கேட்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். 90 ஆவது பாடலை கேட்பது படிப்பது படிப்படியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+