Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabam: ரிஷப ராசிக்கு 30 நாட்களில் வாழ்க்கையே மாறப்போகுது.. அதிர்ஷ்ட மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-aries-people-during-this-march-m

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு பிரச்சனைகள் தீரும் மாதமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் லாபத்தில் சனி அமரப் போகிறார். ராசிநாதன் சுக்கிரனும் உச்சமாக இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களைப் போன்று செயல்பட வேண்டும் என்று எண்ணி மற்றவர்களை உங்களை ஃபாலோ செய்வார்கள்.

திருமண யோகம்

இந்த மாதத்தில் பேசுபொருளாக இருப்பீர்கள். கண் திருஷ்டி அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். மார்ச் மாத முதல் 15 நாட்கள் டாப் கிளாஸ் யோகம் தரும் காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் எல்லாமே அடுத்தடுத்து நடக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். நல்ல விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டமாக இருக்கும்.

தொட்டது துலங்கும்

காதல் திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் தோழிக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மனைவி, அக்கா, பெண் தோழிகள், அத்தைகளின் ஆளுமை அதிகரிக்கும். அவர்களின் மூலமாக சிறு சிறு செலவுகள் ஏற்படும். சந்தோஷமான செலவுகள் ஏற்படும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக்கூடிய இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு 10, 11 இல் ஏராளமான கிரகங்கள் இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

திறமை வெளிப்படும்

உங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களைப் பார்த்து நிறைய பேர் அந்த வேலையை செய்ய ஆரம்பிப்பார்கள். உங்கள் ஐடியா, டெக்னாலஜி, திறமை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி, வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேகம் அதிகரிக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். பண வரவு இதுவரை தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். இனி அதுபோன்ற நிலைமை எல்லாம் மாறும்.

பேச்சில் தெளிவு

குரு வக்கிர நிவர்த்தியாவதால் பொருளாதார ரீதியான தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களைப் புரிந்துகொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இனி உங்களைப் பற்றி புரிந்து கொள்ளும் சூழல் ஏற்படும். ரிஷப ராசி பெண்கள் பிரகாசமாக மாறுவீர்கள். பேச்சில் நல்ல தெளிவு ஏற்படும். வெள்ளி வாங்குவதற்கான யோகம் உண்டாகும். ஆர்டீபிசியல் நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

தலைமைப் பண்பு

உங்களை அழகுப்படுத்திக் கொள்வீர்கள். சூரியன் 15 ஆம் தேதிக்குப் பிறகு சேருவதால் பல், கண், தலை, தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கண் கண்ணாடியை மாற்றுவீர்கள். தலைமைப் பண்பை ஏற்பீர்கள். கணவன், மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+