Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. இதை மட்டும் பண்ணுங்க போதும்
Rishabam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் 4 கிரகங்கள் அமரும்போது பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். விமானப் பயணங்கள் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உள்ளது. தொலைதூரங்களுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள்.
சுற்றுலா செல்லும் யோகம்
இன்பச் சுற்றுலா, குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். அந்த சுற்றுலாவில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப ராசியினர் அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பயணங்கள் செல்லும்போது தேங்காய் அல்லது பூசணிக்காய் உடைத்துவிட்டுச் செல்வது நல்லது.
ஆரோக்கியம்
பெற்றோரின் தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பயணங்கள் சமயத்தில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களுடன் தகராறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவதற்கு சிரமம் ஏற்படும். இருப்பினும், நினைத்ததை செய்து முடிக்கும் யோகம் ஏற்படும். வியாபாரம், தொழில், உத்தரவாதத்துடன் கூடிய முடிவுகள், தெய்வீக பயணங்கள் என எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும்.
தொழில்
உங்களுக்கு, குடும்பத்தினருக்கு சுத்திப் போட்டுக் கொள்வதை கடைப்பிடிக்க வேண்டும். நிறைய புதிய புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதி வேலை செய்பவர்களுக்கு, எம்பஸியில் வேலை செய்பவர்கள், வெளியூர் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். இருக்கும் வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு கண்டிப்பாக மாறும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
நிறைய தானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுடைய அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. மூலப் பிரச்சனைகளுக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சிறு சிறு பிரச்சனைகள் மட்டும் வந்து போகும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications