Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொழிலில் அற்புத மாற்றம்.. இந்த வாரம் நன்மைகளை அள்ளித் தரும்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கடன் அமைப்பில் இருந்த பாதிப்புகள் தீரும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். முதுகுத் தண்டுவடப் பிரச்சனை, சுழுக்கு பிரச்சனை போன்றவற்றி உரிய சிகிச்சை, மருத்துவம் கிடைக்கும்.
தொழில் மாற்றம்
தொழில் மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக தொழில் மாற்றம் ஏற்படும். லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தொடர்ந்து இருந்து வரும் அற்புதமான காலத்தைப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல நன்மைகள், சந்தோஷங்கள் ஏற்படும்.
புதிய வேலைவாய்ப்பு
பத்தாம் இடம், பாக்கிய ஸ்தானம் இரண்டும் நன்றாக இருப்பவர்களுக்கு வேலையில் நிரந்தரம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்சனைகள், வாக்குவாதங்கள் அனைத்தும் நீங்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். நிறைய பேருக்கு தாய், மாமியார் உடல்நிலையில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
லாபம்
பெரிய லாபம் கிடைக்கக்கூடிய காலகட்டம். ஏதோ ஒரு விதத்தில் இந்த வாரம் முழுவதும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கஷ்டங்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோகமும், அனுகூலமும் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள், சவால்கள் நீங்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி ஏற்படும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். சுப்பிரமணியர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications