Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டம் உண்டு
Rishabam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆவார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான நேரமாக இருக்கும். பாக்கிய ஸ்தானம் நன்றாக இருக்கிறது. எந்தவொரு பிரச்சனையும், கவலையும் ஏற்படாது. செவ்வாய், புதன், சூரியன் நன்றாக இருக்கும்போது பெரிய வெற்றிகள் ஏற்படும். நிறைய பேருக்கு பூர்வீக சொத்துகள் கிடைக்கும். அப்பாவின் ஆதரவு, உதவிகள் கிடைக்கும்.
வாய்ப்புகள் தேடி வரும்
நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் இப்போது நடக்கும். பெரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நிறைய பிரச்சனைகள் தீரும். எதற்காகவும், யாருக்காகவும் கவலைப்படத் தேவையில்லை. நிறைய பேருக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் சாதகமான விஷயங்கள் நடக்கும். ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கவனம்
10 ஆம் இடத்தில் சுக்கிரன், ராகு, புதன் இருப்பதால் நிறைய நன்மைகள் உண்டு. குரு பார்வையில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் புதிய வேலை கிடைக்கும், வண்டி வாகனங்களை மாற்றுவதற்கான யோகம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் ஸ்டவ், கேஸ் சிலிண்டர், படுக்கை அறை போன்றவற்றில் தீ விபத்து, தீக்காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். அரசுத் துறை, அரசியல் வாதிகளுக்கு மனக் குழப்பங்கள் தீரும்.
திடீர் அதிர்ஷ்டம்
நல்ல முடிவுகள் எல்லாம் அடுத்தடுத்து எடுத்து முன்னேற்றம் அடைவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications