Rishabam: ஜூலை 6 - 12 ரிஷப ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. அற்புதமான மாற்றம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்கள், வார்த்தைகளில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். துணையின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும். எல்லாவிதத்திலும் அனுகூலம் காணப்படும்.

மனவேதனை

அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வேதனை தீரும். எல்லா விதத்திலும் அனுகூலம் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். துணை விஷயத்தில் இருந்து வந்த நீண்ட நாள் கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த தடைகள் தவிடு பொடியாகும்.

மேன்மை

உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும் காலகட்டம். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களுடன் மனத் தாங்கல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. எதிரிகளை எல்லாம் ஒன்று சேர்த்து நட்பாக்கிக் கொள்வது நல்லது. பெரிய அளவு ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.

முன்னேற்றம்

தனிப்பட்ட முறையில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மன அழுத்தம் இருக்கக்கூடிய காலகட்டம். தேவையில்லாத கோபம், டென்ஷன் இருக்கும். பல் தொடர்பான பாதிப்புகளை சரி செய்வீர்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அம்மாவின் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனியை குரு பார்க்கிறார்.

மதிப்பெண்

நண்பர்களால் ஆதாயம், நன்மைகள் கிடைக்கும். மூத்தவர்களால் திடீர் பண வரவுகள் உண்டாகும். சொத்துகள் சேரும் யோகம் உண்டு. வீட்டில் நிறைய நன்மைகள் உண்டாகும். வீடு வாங்கக்கூடிய யோகம். இடமாற்றம் உண்டாகும். நீங்கள் அப்ளை செய்யும் கடன்கள் உண்டாகும். நீங்கள் செய்யும் விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீத நன்மைகள் உண்டாகும் காலகட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+