Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. பிரச்சனைகள் எல்லாம் தீரப்போகுது
Rishabam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பெரிய அளவில் லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மன அழுத்தம் தீரும். கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக நல்ல பெயர், புகழ் கிடைக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
சிக்கல்களுக்கு தீர்வு
பயணங்களில், போர் போன்ற விஷயங்களில் சிக்கியிருப்பவர்கள் தாய்நாட்டுக்கோ, அல்லது உங்களுக்குப் பிடித்த இடங்களுக்கோ செல்லும் சூழல் உண்டாகும். ஒருவிதமான பதட்டமான அமைப்புகள் எல்லாம் மாறும். வேறு வேலை தேடலாமா, வேலை மாற்றம் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் வேறு நல்ல வேலைகள் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
யோக பலன்கள்
எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டம். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். நினைத்த காரியங்களில் நடத்தி முடிக்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதே மனதில் நிம்மதியை ஏற்படுத்தும். வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் அற்புதமான அனுகூலம் ஏற்படும்.
அனுகூலம்
செல்வாக்கு ஏற்றம் உண்டாகும். வார்த்தைகளில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் நல்ல காரியங்கள், விஷயங்கள் நடக்கும் யோகம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் சார்ந்து இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் நல்ல காலகட்டம். தொழிலில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். பிரச்சனைகள், பாதிப்புகள், சங்கடங்கள் தீரும் நல்லக காலகட்டம். நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரன் வழிபாட்டை பங்குனி மாதம் முழுவதும் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications