Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம்
Rishabam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபம் அபரிமிதமானதாக இருக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். புதுப்பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் எதிரிகளால் வரும் பாதிப்புகளில் வெற்றி பெறுவீர்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்லக்கூடிய நல்ல காலகட்டம்.
பாதிப்புகள் நீங்கும்
தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்குகள் கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு திடீரென அதிர்ஷ்டம் ஏற்படும். அந்த அதிர்ஷ்டத்தால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டம்.
செல்வாக்கு கூடும்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய அளவில் ஏற்றம் ஏற்படும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும். தயக்கங்கள் இல்லாமல் முன்னோக்கிச் செல்லக்கூடிய நல்ல காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.
தடைகள் நீங்கும்
தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள், பணத் தாங்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும் தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.
வழிபாடு
திடீர் அதிர்ஷ்டத்தால் முன்னேற்றம் பெறும் அமைப்பு உள்ளது. குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். கழிவுப் பாதையில் சிறு பாதிப்புகள் வந்தாலும் அதில் கவனமாக இருப்பது நல்லது. உரிய மருத்துவ நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications