Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. பணத்தை மூட்டையில் அள்ளும் யோகம்
Rishabam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Rishabam rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். வேலை நிரந்தரமாக அமையும். அரசு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதிற்குள் இருந்து வந்த அழுத்தங்கள் எல்லாம் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
பணவரவு
மனதில் நம்பிக்கை உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும். புதிய விஷயங்களில் வெற்றி ஏற்படும். வியாபார உத்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் புதன் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு வியாபார உத்திகளை கடைப்பிடிக்க வைக்கும். பெரும் பண வரவு வரும். பெரிய பிரச்சனைகள் எல்லாம் தீரும். நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம். இந்த வாரத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.
ஆரோக்கியம்
கழிவுப் பாதையில் சிறு பிரச்சனைகள் வந்தாலும் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். சுக்கிரனால் நல்ல பணவரவு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். யோக பலன்கள் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும்.
யோகம்
சினிமா, நாடகம், கலைத் துறையினர், மீடியா துறையினர் விருதுகளைப் பெறும் யோகம் உண்டு. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கும் காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். அடுத்தடுத்து யோகம் பெறும் நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் அற்புதமான நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
பண வரவு, திருமண யோகம் உண்டாகும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். பட்டீஸ்வரர் சுவாமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரன் வழிபாடு செய்வது நன்மை.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications