Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பேச்சில் தானம் கண்டமே.. கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
பெண் தெய்வ வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு ஏற்றத்தை தரும். துர்க்கை, அபிராமியை மனதார வழிபாடு செய்வது அனுகூலத்தை தரும். அபிராமி பாடல்களை சொல்வது, கேட்பது நல்லது. பெற்றோர், பெரியோருடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். தொழிலில் இடமாற்றம் வந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாக்கு கொடுப்பதில் கவனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். அதனால் முடியாத விஷயங்களை செய்து முடிப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பதால் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம், பெரிய அளவு நம்பிக்கையையும் ஏற்படுத்தும். தொழிலில் நீங்கள் நினைக்காத அளவு முன்னேற்றம் உண்டாகும்.
அனுகூலம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் அனைத்து காரியங்களிலும் முன்னேற்றம், வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் அதிஅற்புதமான மேன்மைகள் உண்டாகும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். அதற்கான உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
தடைகள் நீங்கும்
யோகமும், அனுகூலம் ஒன்று சேரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் வாக்குவாதம், உணர்ச்சிவசப்படுதலை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்தவொரு சிறிய வாக்குவாதத்தையும் செய்யாமல் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications