சனி அஸ்தமனத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்.. தொழில், பணம், செல்வம், செழிப்பு கொட்டும்
சனி அஸ்தமன பலன்கள்: சனி பகவான் பிப்ரவரி 28 ஆம் தேதி அஸ்தமனம் நடைபெறவுள்ளது. இந்த சனி அஸ்தமனத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய இயக்கத்தையும், ராசிகளையும் மாற்றுகின்றன. இந்த கிரகப் பெயர்ச்சியினால் உண்டாகும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் ஏற்படும்.

ஒவ்வொரு மனிதன் செய்யும் கர்ம பாவங்களுக்கு ஏற்ப பலனைத் தரக்கூடியவர் சனி பகவான். நீதிமான், நீதிக்காரகன், கர்மக்காரகன், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். சனி பகவான் மார்ச் மாதம் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடைவதற்கு முன்பு பிப்ரவரி 28ஆம் தேதி சனி அஸ்தமனம் நடைபெறவுள்ளது. சனி கிரகம் சுமார் 37 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். பின்னர், ஏப்ரல் 6 ஆம் தேதி உதயமாவார்.
மார்ச் மாதத்தில் இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக சனி அஸ்தமன நிகழ்வு நடக்கும். இந்த அஸ்தமனத்தால் சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். இனி தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும். அந்த வகையில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: சனி அஸ்தமன காலத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி உண்டாகும். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
சிம்மம்: சனி அஸ்தமன் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். மன அழுத்தம், மன பாரங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். வேலை, வியாபாரம், வணிகத்தில் நல்ல நன்மைகளையும், ஆதாயங்களையும் பெறுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வணிகத் துறையில் உங்களுடைய சக வியாபாரிகளுக்கு கடும் போட்டியாளராக மாறுவீர்கள். அதில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள். பண வரவு கணிசமாக உயரும்.
கன்னி: சனி பகவானின் ஆசியால் ஏராளமான நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். உங்களுடைய வேலை, வியாபாரம் மற்றும் தொழிலில் அமோகமான வெற்றியைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துகளை சேர்ப்பதற்கான யோகம் உண்டு. வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்தைவிட நல்ல லாபம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையுடன் இனிமையான நேரத்தைக் கழிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு: சனிப்பெயர்ச்சி முன்பு நடைபெறும் சனி அஸ்தமனத்தால் தனுசு ராசிக்கார்ரகளுக்கு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான பொழுதை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வருமானத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி அஸ்தமனம் நல்ல அதிர்ஷ்ட பலன்களைத் தரும் காலமாக இருக்கும். லாபத்தைக் கொடுக்க கூடிய காலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நிதி நிலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம்











Click it and Unblock the Notifications