தனுசு ராசிக்கு சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் நன்மையா?.. தீமையா?.. முழு விவரம் இதோ
தனுசு ராசி பலன்: குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நன்மைகள், தீமைகள், என்னவிதமான ஏற்றங்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி
தனுசு ராசியின் 4 ஆம் இடத்தில் சனி பகவான் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் ராசிக்கு ஏழாம் இடத்திலும், 3ஆம் இடத்தில் ராகுவும், 9 ஆம் இடத்தில் கேதுவும் உள்ளன. சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் விவசாயிகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும் நல்ல லாபம் உண்டாகும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம், லாபம் உண்டாகும். 6 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

வேலை இழந்தவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, அரியர்ஸ், போனஸ் என அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதியவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான காலகட்டம். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். நல்ல ஊழியர்கள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டாகும். சனி ராசிக்கு 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சமுதயாத்தில் மதிப்பு, மரியாதை, கெளரவம் உண்டாகும். அந்தஸ்து, புகழ் கூடும். அரசுத் தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்.
தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய கிளைகள் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும். எவ்வளவு பெரிய நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு திருப்தியற்ற நிலை இருக்கும். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். கடன் தன்மை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. மூத்த சகோதர, சகோதரிகள் உங்களை விட்டு விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளால் பிரச்சனை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.
குருப்பெயர்ச்சி
குரு உங்களுடைய ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு வந்து ராசியைப் பார்ப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். திருமணம் வேண்டாமென்று நினைத்தவர்களுக்கு கூட திருமண யோகம் உண்டு. பெரிய அளவில் தொழில் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் உருவாகும். குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் நல்ல நட்பு வட்டாரம் உண்டாகும். அவர்களால் உங்கள் வாழ்க்கையில் நன்மை ஏற்படும். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும்.
உங்களுடைய எண்ணங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குரு ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பது நல்லது. குரு 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எண்ணங்கள், சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்துகளை விற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குரு 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தேவையற்ற மனக்குழப்பம், நிம்மதியற்ற சூழல் உருவாகும். முயற்சிகள் செய்யாவிட்டால் தோல்வி அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அம்மாவை பிரிந்திருக்க வேண்டிய காலகட்டம் ஏற்படும். ஊர் மாற்றம், இடமாற்றம் உண்டாகும்.
ராகு கேது பெயர்ச்சி
3 ஆம் இடத்தில் ராகு வருவதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தகவல் தொடர்பை பயன்படுத்தி ஏற்றத்தை பெறுவீர்கள். சிறுதொழில், சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கேது 9 ஆம் இடத்தில் இருப்பதால் உயர்கல்வி படிப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். வேலை மாற்றம் உண்டாகும்.
இனம் தெரியாத கவலை, மனக்குழப்பம் உண்டாகும். நிம்மதியான தூக்கம் இல்லாத நிலை ஏற்படும். பயணங்களில் நிறைய பிரச்சனைகளை கேது உண்டாக்குவார். வெளிநாட்டு தொடர்புகளால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ வழிபாடு நல்லதொரு ஏற்றத்தை தரும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications