தனுசு ராசிக்கு ‘தாம் தூம்’ அதிர்ஷ்டம்.. இனி தொட்டதெல்லாம் வெற்றி.. என்ஜாய்
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் தனுசு ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் தனுசு ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு சனி பகவான் 4 ஆம் இடத்திலும், குரு பகவான் 7 ஆம் இடத்திலும், ராகு பகவான் 3 வது இடத்திலும், கேது பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார்கள். சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்தை பார்க்கிறார். கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை, அலைச்சல் சற்று குறையும். குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருப்பதால் கஜ கேசரி யோகம் உண்டாகியுள்ளது. உங்கள் ராசி நாதனான குரு ராசியை பார்ப்பது மனதில் தெளிவு பிறக்கும்.
முயற்சிகளில் வெற்றி
குரு பார்வை வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறப்பாக உள்ளது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் துணிவுடன் இறங்கி சாதனை படைப்பீர்கள். மேலும் குரு, ராகுவுடன் இணைந்து முயற்சியை பார்க்கிறார். இதனால் பிரம்மாண்ட முயற்சிகளில் ஈடுபட்டு சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். உங்களின் எண்ணங்களில் பிரம்மாண்டம் காணப்படும்.
செல்வாக்கு உயரும்
சனி பகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். தொழிலில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். தொழிலில் லாபம் ஏற்படும். உங்களின் பலத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளும் காலகட்டமாக இது இருக்கும். கடந்த காலங்களில் எங்கு அவமானம் ஏற்பட்டதோ, அவர்கள் முன்பு உங்களின் செல்வாக்கு உயரும். ராகு 3 ஆம் இடத்தில் இருந்து குரு பகவானை பார்க்கிறார். இதுவும் அருமையான அமைப்பாகும்.
கடன் குறையும்
கேது பகவானால் உங்கள் கற்பனை திறன் அதிகரிக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய ஏற்றம் உண்டு. தொட்டது துலங்கி இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
ஆரோக்கியம்
தந்தை, தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். தந்தைக்கு உஷ்ணம், ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாசி, பங்கு மாதங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு தொடர்பான ஆவணங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். அதில் கவனமாக இருந்தால் எதிலும் சாதிக்க முடியும்.
கவனம்
வண்டி வாகனங்களை இயக்கும்போதும் பயணங்களின் போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் பயணிக்கும்போது அதுதொடர்பான ஆவணங்களை வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் சென்று வழிபாடு செய்வதால் தனுசு ராசிக்கு நல்ல பலன்கள் ஏராளமான கிடைக்கும்.












Click it and Unblock the Notifications