சனி குரு ராகு கேது பெயர்ச்சி: கோடீஸ்வர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்?
சனி குரு ராகு கேது பெயர்ச்சி 2025: சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான யோகம் பெறும் வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் பணக்காரராக மாறப்போகும் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி: பொதுவாக ஆடம்பரத்தையும், வசதி வாய்ப்புகளையும் விரும்பக் கூடியவர்களாக ரிஷப ராசிக்காரர்கள் இருப்பார்கள். உங்களுக்கு இந்த ஆண்டில் அதிக அளவிலான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாவதற்கான சாதகமான காலநிலை உருவாகும். உங்களுடைய கடின உழைப்பால் நிதி நிலையை முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அனைத்து விதமான வெகுமதிகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலை தொடர்பான விஷயங்களில் அபரிமிதமான யோகங்களைப் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகளும் அதன் மூலம் நல்ல யோகங்களும் உண்டாகும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் எடுத்த விஷயங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். வேலைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். 2025 ஆம் ஆண்டில் அதன் மூலம் வெற்றி பெறுவதோடு ஆதாயத்தையும் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. முதலீடு மற்றும் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதன் மூலமாக நல்ல பண வரவு உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதுமே முன்னேற்றத்தைக் தரக்கூடிய ஆண்டாக அமையும். அதிக அளவிலான செல்வத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பிரச்னைகளைக் கண்டு பயப்படாமல் அதனைத் தீர்ப்பதற்கு சரியான வழியைக் கண்டுபிடிப்பீர்கள். திட்டமிட்டு கடினமாக உழைப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். முன்னேற்றம், வளர்ச்சி உங்கள் வசமாகும். திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் அமோகமான நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களுடைய ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் ஏழரை சனியிலிருந்து நீங்கள் விடுதலை அடையப் போகிறீர்கள். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் அமோகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடின உழைப்பிற்கான நற்பலனை பெறுவீர்கள். நிதிநிலை சார்ந்த விஷயங்களில் நல்ல பலனைப் பெறுவீர்கள். நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீன ராசி: மீன ராசியினர் ஜென்ம ராசியை கடக்கப் போகின்றனர் உங்களுடைய திட்டமிடல் மற்றும் தனித்துவமான செயல்பாடுகளால் வெற்றியைக் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். ஏழரை சனியின் உச்ச சனியான ஜென்ம சனியைக் கடப்பதால் நற்பலன்கள் உண்டாகும். புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதும், செயல்படுவதும் நல்லது. உங்களுடைய படைப்பாற்றலால் மகிழ்ச்சி மற்றும் ஆதாயத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகும்.












Click it and Unblock the Notifications