சனி பகவான் அருளால் 5 ராசியினருக்கு ஜாக்பாட்.. பணம், அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் சில ராசியினருக்கு செல்வம், செழிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியும் மற்றும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கப் போகின்றன. சனிப்பெயர்ச்சி, முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் உண்டாகும். செல்வம், செழிப்பு, தொழிலில் வெற்றி என அனைத்துவிதமான பலன்களையும் அனுபவிக்கப் போகின்றனர். 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

sani peyarchi rasi palan

மார்ச் மாதத்தில் சூரியன், குரு, சுக்கிரன், புதன், சனி, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அதேபோல, மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த மாற்றங்களால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்: சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடத்தை அளிக்கப் போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். முதலீடு செய்வதற்கான சிறந்த நேரமாகவும், லாபத்தை அனுபவிக்க கூடியதாகவும் இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி கிடைக்கும். குடும்பத்தினருடன் உங்களுடைய இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்: மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கேற்ற அங்கீகாரத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். பணம் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். சொந்த வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், செழிப்பும் இருக்கும். புதிய நண்பர்கள், புதிய உறவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சரியாக திட்டமிட்டு இலக்குகளை அடைவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுடன் உறவை வலுப்படுத்துவதர்கான சிறந்த நேரமாக இருக்கும்.

துலாம்: இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கென்று விதிமுறையை விதித்து நல்லிணக்கத்துடன் இருப்பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட திறமையை வளர்ச்சிக் கொள்வீர்கள். கிடைக்கும் புதிய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்துக்கான காலமாக இருக்கும்.

தனுசு: மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பல நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களுடைய பேச்சு ஆற்றல் அதிகரிக்கும். உங்களுடைய திறமையாலும் பேச்சாலும் எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் உறவு வலுப்படும். நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். இலக்குகளை அடையவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உகந்த நேரமாக இருக்கும்.

மீனம்: சனிப்பெயர்ச்சி செல்வ செழிப்பை மீன ராசிக்காரர்களுக்கு அள்ளித் தரப் போகிறது. உங்களுடைய கடின உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். நிதி ஆதாயம் பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு, புதிய வாகனம், நிலம் என்று செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வாழ்க்கையில் சமநிலையுடன் இருப்பீர்கள். மன அமைதி அதிகரிக்கும். சரியான திட்டமிடலுடன் இலக்குகளை அடைவீர்கள்.வாழ்க்கையில் நல்ல பிடிமானம் கிடைக்கும். வளர்ச்சியான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+