சனிப்பெயர்ச்சி: டிரம்புக்கே டஃப் கொடுக்கும் "கடகம்".. பணத்துக்கு கஷ்டம்தான் ஆனாலும் சாதிக்கும் காலம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கடக ராசியினருக்கு அஷ்டம சனி விலகுகிறது. கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்படம் போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்: கடக ராசியைப் பொருத்தவரை உங்கள் ராசிக்கு அஷ்டம சனி விலகி 9 ஆம் இடத்துக்குப் போகிறார். 9 ஆம் இடத்தில் சனி பகவான் வருவது நீண்ட தூர பயணத்துக்கு வழிவகுக்கும். வெளிநாட்டு, வெளிமாநில வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி என்பது கிடைக்கும்.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், கடக ராசியினருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. 9 ஆம் இடத்தில் சனி வருவதால் வெளிநாட்டில் இருக்கும் கடக ராசியினருக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. கடின உழைப்பை போட வேண்டிய காலகட்டமாக இருக்கும். அந்த உழைப்புக்கேற்ற ஊதியத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். முதலாளிகளாக இருந்தாலும் கடினமாக உழைக்க கூடிய காலகட்டமாக இருக்கும்.
வீடு கட்டுவதற்கான கடன், பர்சனல் லோன், தொழிலுக்கான கடன் போன்றவற்றை வாங்கலாம். தொழில் தொடங்குவதற்கான காலகட்டமாக இருக்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகாலகம் மிக அருமையான நேரமாக இருக்கும். கடன் வாங்கி தொழில் செய்பவர்கள் அந்த தொழிலில் நல்ல லாபத்தையும், கடனை கட்டி முடிப்பதற்கான நல்ல நேரமாகவும் இருக்கும். அனைத்துக் கடன்களையும் அடைக்கும் யோகம் உண்டாகும்.
கடக ராசியினரின் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக மூன்றாவது நபர்களை உங்கள் குடும்பத்துக்குள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அது உறவுகளாக, நண்பர்களாக, உடன் பிறந்தவர்களாக யாராக இருப்பினும் அவர்கள் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. நீங்களே உங்களுடைய சண்டைகள், பிரச்சனைக்களுக்கு தீர்வு காணுவது நல்லது.
9 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொத்து, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சார்ந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ராசி 11 ஆம் இடத்தைப் பார்ப்பது மற்றும் உங்கள் ராசியின் 3 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் படிப்பை இடைநிறுத்தும் சூழல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டம் என்பது பெரிதளவில் இருக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகவும், கவனமாகவும், விழிப்புணர்வுடனும் செய்வது நல்லது. பணப் புழக்கம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பணத்தை சிக்கனமாக சேமித்து வைப்பது நல்லது. அதிக அளவில் பணத்தை செலவு செய்யாமல் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications