சனிப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு வேலை, தொழிலில் மாற்றம்.. என்ன பலன்கள் கிடைக்கும்?
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுன ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்படம் போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்: மிதுன ராசியைப் பொருத்தவரை ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான் வருகிறார். 10 ஆம் இடம் என்பது கர்ம ஸ்தானம். இது மிகவும் நல்ல அமைப்பாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம், முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல கிரெடிட் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். சினிமா, பாலிடிக்ஸ், யூடியூப் மீடியா, அரசுத் துறை தொடர்பான மக்களுடன் பழக கூடியவர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அடுத்த இரண்டரை வருடங்கள் உங்க காட்டில் மழை பெய்யும்.
புகழ், பெயர் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு நிறைய சப்ஸ்கிரைபர்கள் கிடைப்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள், தலைமை பதவிகள் கிடைக்கும். கட்சியில் இருப்பவர்களுக்கு மாவட்ட பொறுப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவு உண்டாகும்.
உடல் கட்டுப்பாடு தேவை. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நல்லது. குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு வருவதால் உடல் பருமன், உடல் எடை போடுவதற்கான வாய்ப்புள்ளது. தினசரி வேலைகளை சரியாகச் செய்து, சிறப்பாக செயல்பட்டு இலக்குகளை முடிப்பீர்கள்.
அப்பா, அம்மா வழியில் யாருக்கேனும் கர்மா செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அம்மா வழியில் தாத்தா, பாட்டி இருந்தால் ஜாதகப்படி அத்திமகாலம் இருந்தால் இந்த வாய்ப்பு ஏற்படும். வரும் இரண்டரை வருடங்களில் அப்பா, அம்மா வழியில் தாத்தா, பாட்டிக்கு கர்மம் செய்வதற்கான சூழல் ஏற்படும். தாய், தந்தை நோய் வாய்ப்பட்டிருந்தால் அவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி இருப்பதால் பெற்றோருக்கு பெரிய மருத்துவ செலவுகள் செய்வதற்கான சூழல் ஏற்படும். காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. தொடைப் பகுதியில் எலும்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கால் வலி பிரச்சனைகள் ஏற்படும். வசிக்கும் இடத்தில் செலவு செய்யும் நிலை ஏற்படும். புனரமைப்பு பணிகளை மேற்கொள்வீர்கள்.
அக்கம்பக்கத்தினருடன் சிறிய சண்டை வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். யாரிடமாவது உதவி கேட்கும் நிலை ஏற்படும். மந்திரியாக இருந்தாலும் உதவி கேட்கும் நிலை ஏற்படும். கெளரவம் பார்க்காமல் உங்கள் காரியத்தை சாதிப்பது நல்லது. அடுத்த இரண்டரை காலம் யாரையாவது சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும்.
வேலை, தொழில் விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத நபர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 10 ஆம் இடத்தில் சனி இருக்கும்போது திருமணம் செய்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். திருமண விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications