சனிப்பெயர்ச்சி: மீனத்துக்கு ஜென்ம சனி ஆரம்பம்.. இளைஞர்களை வெச்சு செய்யப் போகுது
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறார். எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்பம் வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தரமாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.
சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி வரப் போகிறது. உங்கள் ராசியில் வந்து சனி பகவான் உட்காரப் போகிறார். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஜென்ம சனி நல்ல பலன்களை மட்டுமே தரும். வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை செலவு செய்து நல்ல வீடு வாங்குவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து மகிழ்வீர்கள். இந்த சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
வியாபாரத்தை தூக்கி நிறுத்தக்கூடிய அமைப்பு உண்டாகும். நல்ல பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் அமைப்புகள் நன்றாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். 30 வயதில் இருக்க கூடியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்றுக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரும்பாலான மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கடும் மன அழுத்தங்களையும், கஷ்டங்களையும் தரும்.
உங்கள் ராசியில் வந்து சனி உட்காருவதால் 30 வயதில் இருப்பவர்கள் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். வாய்ப்புகளைத் தவறவிடுவீர்கள். காதலில் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. காதலில் விழுபவர்களுக்கு அடுத்த வருடம் தோல்வி ஏற்படும். பெற்ற தாய், தந்தை, சகோதரர்களைத் தவிர மீன ராசி பெண்கள் வேறு யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
பண விவகாரங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. அகலகால் வைப்பதை தவிர்ப்பது நல்லது. அந்நிய மொழி பேசுபவர்களால் பண இழப்பு, பெயர் கெடுவதற்கான வாய்ப்பு, மன அழுத்தம் கெடுவதற்கான வாய்ப்பு, கணவன் மனைவி உறவு நன்றாக இல்லாத தன்மை, திருமணமே நடக்கவிடாமல் தடுக்கும் அமைப்பு, குடும்பத்தில் காதல் பிரச்சனைகள், பள்ளி கல்வியில் தொந்தரவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
கிரெடிட் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. சோம்பல், விரக்தி, நஷ்டம், கஷ்டம் போன்றவற்றை சந்திப்பதற்கான சூழல் ஏற்படும். கஷ்டப்பட்டாலும் பண வரவு வருவதற்கான வாய்ப்புள்ளது.
வாழ்க்கையில் அனைத்துவிதமான படிப்பிணைகளையும் இந்த காலகட்டத்தில் கற்றுக் கொள்வீர்கள். இந்த அனுபவங்களின் மூலம் உங்களுக்கு எது நல்லது, உறவுகள் என்றால் என்ன, பணத்தின் அருமை போன்ற அனைத்தையும் தெரிந்துகொண்டு நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பொறுமையாக, நிதானமாக எடுத்த காரியங்களை செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications