Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் கவனம்..நிதானம் தேவை..சனிபகவான் சொல்வது யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி புதன்கிழமை சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி பகவானின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமா? இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே திருநள்ளாறு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருநள்ளாறு கோயில் வழக்கப்படி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன.

சனி பெயர்ச்சியை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 28ம் தேதி வரை காலை வரை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலையில் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது.
மதியம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் பங்கேற்றனர்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே..சனிபகவான் கண்டச்சனியாக கவலைக்கு ஆளாக்கி வருகிறார். ஏப்ரல் முதல் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் ஏற்படும். இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே..தற்போது ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெற்று வரும் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். சனியின் வக்ர சஞ்சார காலத்தில் பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் கையை விட்டுப் போகும். காதலிப்பவர்களுக்கு இது போராட்ட காலமாக இருக்கும். பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நட்பு வட்டாரங்களில். விரிசல்கள் ஏற்படும் விலகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வண்டி வவாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. ஜூன் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் பணப்பற்றாக்குறையும், வேலை செய்யும் இடத்தில் வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு அற்புதமான வாய்ப்பு. கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கியில் கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் நீங்கும். சனிபகவான் வக்ரமாக சஞ்சரிக்கும் காலத்தில் வீண் அலைச்சல், வேலைகளில் இழுபறி நிலை ஏற்படும். பாதிப்புகள் தீர குச்சனூர் சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதத்திற்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். அர்த்தாஷ்டம சனியால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய வியாழக்கிழமையில் ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+