சனி பெயர்ச்சி பலன் 2023: யாருக்கு ராஜ யோகம்.. யாருக்கு எச்சரிக்கை தேவை.. பிரபல ஜோதிடர் கணிப்பு!
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனிபகவானால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் பிரம்ம ஸ்ரீ ராம்ஜி பரமஹம்ச சுவாமிகள். இந்த சனி பெயர்ச்சியால் யாருக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது என்று ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்காக, கணித்து கூறியுள்ளார் பிரம்ம ஸ்ரீ ராம்ஜி பரமஹம்ச சுவாமிகள்.
சனி பகவான் எதிர்மறையான விசயங்களை ஊக்குவிப்பார். நாட்டில் போராட்டங்கள் அதிகரிக்கும். தேவைகளுக்காக மக்கள் போராட்டம் நடத்துவது அதிகரிக்கும். கும்ப ராசியில் சனி பகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

கும்ப ராசியில் உள்ள சனி பகவானுக்கு இரண்டாவது வீட்டில் சனி இருக்கிறார். மூன்றாவது வீட்டில் ராகு பயணம் செய்கிறார். பலருக்கும் கலவையான பலன்களைத்தரும். 12 ராசிகளுக்கும் சனி பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது பிரம்ம ஸ்ரீ ராம்ஜி பரமஹம்ச சுவாமிகள் துல்லியமாக கணித்துள்ளார்.
உதாரணத்திற்கு, மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்வார்கள் அல்லவா அது நடக்கும். ராஜ வாழ்க்கை வாழப்போகிறீர்கள். இரண்டரை ஆண்டுகள் உங்கள் காட்டில் மழைதான். சனி பகவான் முதன் முறையாக உங்களுக்கு நல்லது செய்யப்போகிறார் என்று கணித்துள்ள அவர், கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அஷ்டமத்தில் பயணம் செய்வதை சுட்டிக் காட்டி, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி என்பதை சொல்லி, மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது. அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். யாரையும் நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சனி பகவான் ஆட்சி பெற்று ஆட்சி பெற்று ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். நோய்கள் நீங்கும் எதிர்ப்புகள் விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது இதயமாக இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் என குறிப்பிடும் ஸ்ரீ ராம்ஜி பரமஹம்ச சுவாமிகள், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை நிலவிய தடைகள் விலகும். மாடு, மனை, கார் வாங்கும் யோகம் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், விபத்துகளில் சிக்காமல் வாகனத்தை இயக்குவது இந்த காலகட்டத்தில் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக அனைத்து ராசிகளுக்குமான பலன்களை மேற்கண்ட வீடியோவில் நீங்கள் முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications