சனி பெயர்ச்சி.. கடன் பிரச்சினை தீர்க்கும் சனிபகவான்.. மறந்தும் இந்த நேரத்தில் கடன் வாங்காதீர்கள்
சென்னை: எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். யாரெல்லாம் கடன் வாங்கக் கூடாது என்று பார்க்கலாம்.
யார் கடன் வாங்கக்கூடாது: இன்றைக்கு கடன் வாங்காதவர்கள் யாரும் இல்லை. கடன் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும் போனில் தொந்தரவு செய்தாவது கடனை நம் தலையில் கட்டி விடுகிறார்கள். கஷ்டம் என்று பணம் கடனாகக் கேட்டால் தங்களின் சேமிப்பில் இருந்து முடிந்த அளவு பணத்தை புரட்டி கொடுப்பார்கள். ஆனால் கடன் வாங்கியவர்களோ, சில நாட்களிலேயே கடன் கொடுத்தவரை பற்றியும், வாங்கிய கடன் தொகை பற்றியும் முழுமையாக மறந்து விடுவார்கள். பணம் கொடுத்தவர் பாடு படு கஷ்டமாகிவிடும்.

சனிபகவான்: நம் வாழ்வில் பிரச்சினைகளை சந்திக்காமல் இருப்பதற்கு சிறந்த வழி பிறருக்கு கடன் கொடுக்காமல் இருப்பது தான். அதே போல ஒரு சிலரின் வாழ்க்கை கடனிலேயே கழியும் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை கடனுக்கும் வட்டி கட்டவுமே செலவு செய்வார்கள். ஒருவருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போதும் கடன் வாங்கக் கூடாது. அதே போல கோச்சார ரீதியாக குரு ஆறாம் வீட்டில் நிற்கும் போதும் குரு பகவான் சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போதும் கடன் வாங்கவே வாங்காதீங்க. அதே போல கடனும் கொடுக்காதீர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
ஜாதக அமைப்பு : ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.
கடனாளி ஆகும் ஜாதகம்: ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை கூடவே புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். கடன் வாங்காமல் இருக்கவும், அந்த கடனை உடனே அடைக்கவும் சில பரிகாரம் உள்ளது. அதே போல கடன் கொடுத்து, அந்த கடன் தொகை தங்களுக்கு திரும்ப வராமல் தவிக்கும் நபர்கள் சில பரிகாரங்களை செய்வதால் மிக விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் அவர்களுக்கே திரும்ப கிடைக்கச் செய்யும்.
கடன் பிரச்சினை: ஜாதகத்தில் லக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர்.
லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 6ம் இடத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடனுக்கு வட்டி கட்டியே வீணாகும். இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடக்கூடாது. மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர்தான் கட்ட வேண்டியிருக்கும்.
கடன் வாங்கவே வாங்கதீங்க: ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. இன்னும் சில மாதங்களில் குரு கேது உடன் இணையப்போகிறார் எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த கடனையும் வாங்காதீர்கள்.
கடன் தீர்க்கும் சனி பகவான்: எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனீஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனீஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். சனிக்கிழமையன்று சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை கட்டுப்படும். ருண விமோசன பிரதோஷ நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications