Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: எதிரிகளை ஓட ஓட விரட்டும் சனி பகவான்..கடன் பிரச்சினை யாருக்கு தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் சிலருக்கு கடன் பிரச்சினையை தீர்க்கப்போகிறார் சனிபகவான். எதிரிகள் பிரச்சினை நீங்கும் நோய்கள், வம்பு வழக்குகள் முடிவுக்கு வரப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை சனிபகவான் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் ஆறாம் இடத்தில் பயணம் செய்வது சிறப்பு. நிறைய ஆதாயங்கள் கிடைக்கப்போகிறது. கும்ப சனி குதூகலத்தை தரப்போகிறார். ருண ரோக சத்ரு சனியால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. சனிபகவான் உங்களது ராசிக்கு 5 மற்றும் 6ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. விபரீத ராஜயோகம் தேடி வரும். சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு வருவதால் கடன்களைப் பற்றி அதிகம் பேசவோ கவலைப்படவோ வேண்டாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்

கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்

2023ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாகப் போகிறது. இதுநாள் வரை மறைந்திருந்த நோய்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

வெற்றியை தரும் சனிப்பெயர்ச்சி

வெற்றியை தரும் சனிப்பெயர்ச்சி

இது நாள் வரைக்கும் ஏற்பட்ட சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும்.

சமுதாயத்தில் மதிப்பு கூடும்

சமுதாயத்தில் மதிப்பு கூடும்

சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.மன அழுத்தங்கள் நீங்கும்.

 சுப காரியங்கள்

சுப காரியங்கள்

வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள்.

கவனமும் விழிப்புணர்வும் தேவை

கவனமும் விழிப்புணர்வும் தேவை

உடன்பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கை கூடி வரும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். ஆறாம் வீட்டு அதிபர் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறது.

மாணவர்களுக்கு யோகம்

மாணவர்களுக்கு யோகம்

மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும் நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

பண விசயத்தில் கவனம்

பண விசயத்தில் கவனம்

சனிபகவான் 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து போய் விட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சியால் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப் போகிறீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+