சனி பெயர்ச்சி 2023: பல மடங்கு லாபத்தை தரப்போகும் கர்ம சனி.. விரைய செலவும் வரும் கவனம்!
சென்னை: சனிபெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கப்போகிறது? சனி பகவானின் பார்வையால் தொழில், வியாபாரம், வேலையில் ஏதேனும் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இது பொதுவான பலன்தான் உங்களின் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் சனியாக பயணம் செய்கிறார். சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார். ரிஷபம் ராசிக்கு விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய இடங்களில் சனி பகவானின் பார்வை விழுகிறது.

யோக காரர் சனிபகவான்
சனி பகவான் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு யோகக்காரர். இப்போது அமரப்போகும் இடம் தொழில் ஸ்தானம். தர்ம கர்மாதிபதி யோகமும் கை கூடி வரப்போகிறது. ரிஷப லக்னமாக இருந்தால் கூடுதல் யோகம் கிடைக்கப்போகிறது. சனி பகவான் நீதிமான் என்றாலும் யோகத்தையும் அள்ளி வாரி வழங்குவார். பத்தில் சனி பல மடங்கு வளர்ச்சியைத் தரப்போகிறார். தொழில், வேலை, வியாபாரத்தில் விருத்தி அடையும். தொட்டது எல்லாம் துலங்கப்போகிறது.

வருமானம் அதிகரிக்கும்
தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் பல மடங்காக பெருகப்போகிறது. பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு சனி தசை, சனி புத்தி நடக்கும் போது சனி பகவான் அள்ளித்தரப்போகிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல யோகம் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். வேண்டாம் என்று உதறி ஓடியவர்கள் உங்களைத்தேடி வருவார்கள்.

ஆட்சி பலம் பெற்ற சனி
சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து நான்காம் வீடான சுக ஸ்தானத்தை பார்வையிடுவதால் புது வீடு மாறலாம். சொந்த வீடு வாங்கலாம். உங்களுக்கு புதிய வண்டி வாகனம் வாங்க யோகம் வந்து விட்டது. வசதிகள் அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடுவதால் பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை கூடும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்பத்தில் குதூகலம்
கணவன் மனைவி இடையேயான நெருக்கடிகள் பிரச்சினைகள் நீங்கும். வீட்டிலும் தொழிலிலும் நல்ல கூட்டணி அமையும். பிள்ளைகள், பெற்றோர்கள் இடையே ஒற்றுமை கூடும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதே நேரத்தில் கர்ம சனி சில நேரங்களில் கர்ம காரியங்களையும் செய்ய வைப்பார்.

ஆரோக்கியத்தில் கவனம்
சனி பகவான் உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கொடுப்பார். வரவு அதிகரிக்கும் போது சில செலவுகள் வரத்தான் செய்யும். மருத்துவ செலவுகளைத் தவிர்க்க தான தர்மங்களைச் செய்யலாம். ஏழைகள், முதியவர்களுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம். மிதியடிகள் வாங்கித்தரலாம். இது சனிபகவானை சந்தோஷப்படுத்தும். வீட்டில் வயதான பெற்றோர்கள் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார வளத்தையும் சுகத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிற சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications