Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வையால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள்.. அடி தூள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பார்வை பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வரக்காரணமே குரு இருக்கும் இடம் பாழ், சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை எந்த ராசிகளின் மீது விழுகிறது அதனால் என்ன பலன்கள் ஏற்படும் யாருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் பார்க்கலாம்.

சனி பார்வை: சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. சனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர். கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளை பார்க்கிறார்.

Sani Peyarchi Palan 2023: Sani Parvai Enna seiyum Enna Parikaram Seiyalam

சனி சஞ்சாரம்: ஒருவரது ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 2ஆம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடி தேவையற்ற பிரச்சனைகள் வார்த்தைகளால் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். ஜாதகத்தில் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய விஷயங்கள் சரியாக இல்லாதபோது இல்வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுகின்றது. சிந்தனை, வாக்கு, மனம் போன்ற அமைப்புக்கள், சரியாக இல்லாததால் காதல், கலப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். புத்திர தோஷம் காரணமாக புத்திர பாக்கியமும் காலதாமதமாகிறது. கணவன் மனைவியிடையே ஓர் ரசனை இல்லாத உடலும் மனமும் ஒன்றாத ஒரு கட்டாய வாழ்க்கை வேண்டா வெறுப்பாக வாழ வேண்டிய வாழ்க்கை அமைந்து விடுகிறது.

சனி நின்ற இடங்கள்: சனி பெயர்ச்சியின் போது ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார். ஒருவரது ஜென்மராசிக்கு 12, 1, 2, ஆகிய ராசி வீடுகளில் தலா இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கும் காலம் ஏழாரை சனி காலமாகும். ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 7ஆம் இடத்தில் கண்டக சனி, 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

மேஷம் லாப சனி பார்வை: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவானால் லாபமும் பொருள் வரவும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். வெற்றிகரமான தகவல் வரும் பாராட்டுக்கள் குவியும். ஆற்றல் அதிகரிக்கும். சனியின் மூன்றாம் பார்வை மேஷ ராசியின் மீது விழுவதால் சில அழுத்தங்கள் ஏற்படும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்டதை ஸ்கெட்ச் போட்டு செய்து முடிப்பீர்கள். லாப சனியால் வருமானம் குவியும். ராசிக்கு எட்டில் சனி பார்வை விழுவதால் அலைச்சலை கொடுத்து பிரச்சினையை நிவர்த்தி செய்வார். லாபமும் வருமானமும் குவியும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். மூத்த சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு பாசிட்டிவ்தான் அதிகம் நடக்கும் நெகட்டிவ் நடக்காது. காரியத்தடை விலகும்.

சிம்மம் கண்டச்சனி: சனிபகவான் ராசிக்கு ஏழாவது வீடான கும்ப ராசியில் அமர்ந்து தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இடமாற்றம் ஏற்படும் ஏழுக்குடையவன் ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமண தடைகள் ஏற்பட்டு திருமணம் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனி பார்வை நேராக ராசியின் மீது விழுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். பயணங்களில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

விருச்சிகம்: சனி உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் அதிபதி சனி தனது பத்தாம் பார்வையால் விருச்சிகம் ராசியை பார்க்கிறார். நீதி, நேர்மை, நாணயமாக இருப்பீர்கள். நினைத்தது நடக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடியும். ஆட்சிப்பெற்ற சனியின் பார்வையால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றமான மாற்றம், வெளிநாடு பயணம் ஏற்படும். நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு யோகமும் முன்னேற்றமும் அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து சென்று தொழில் செய்வீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+