சனிப்பெயர்ச்சி பலன் 2023: சதயத்தில் பயணிக்கும் சனிபகவான்.. குபேரன் அருளால் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் மீது பலருக்கு பயம் வர காரணமே தவறு செய்தவர்களுக்கு அவர் சரியான நேரத்தில் தண்டனைகளையும் படிப்பினைகளையும் கொடுப்பார். மகர ராசியில் பயணம் செய்த சனிபகவான் கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து தற்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு இடம் மாறியுள்ளார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் குபேர யோகமும் தேடித்தரப்போகிறதாம்.
சனிபகவான் கோச்சார ரீதியாக ராசிக்கு 3,6,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நிறைய நன்மைகளை செய்வார். இப்போது கால புருஷ தத்துவத்தின்படி 11ஆம் வீட்டில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இது மேஷ ராசிக்கும் 11ஆம் இடமாகும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் பயணம் செய்வது பல ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு நீங்கதான் ராஜா. வருமானத்தை அள்ளிப்போடப்போகிறீர்கள். சனிபகவானின் அருளாசி ஒருபக்கம் அன்னை மகாலட்சுமியின் அருள் பார்வை மறுபக்கம் என மேஷ ராசிக்காரர்கள் அற்புத பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.

நகை சேரும் காலம்
சனிபகவான் இப்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு வரைக்குமே சதயம் நட்சத்திரத்தில் நேர்கதியிலும் வக்ர கதியிலும் பயணம் செய்வார் சனிபகவான். திருமணம், வீடு கட்டுவது போன்ற திடீர் சுப விரைய செலவுகள் வரும். பெண்களுக்கு நகை வாங்கி முதலீடு செய்யலாம்.
பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம். கணவன் மனைவி, சகோதர சகோதரி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்கும். அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

பதவி உயர்வு கிடைக்கும்
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். நீண்ட நாள் நோய்களுக்கு மருத்துவம் செய்வீர்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் பதவியும் பரிசும் உங்களை நாடி வரப்போகிறது. நோய்கள் நீங்கவும்,சின்னச் சின்ன மன அழுத்தங்கள் நீங்கவும் சனிக்கிழமை அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

சனிபகவான் பார்வை பலன்
லாபஸ்தானத்தில் நிற்கும் சனி பகவானின் 3ஆம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். அதிக அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலர் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.தொலைந்து போய்விட்டதாக நினைத்த சொத்து பத்திரங்கள், நகை, பணம் உங்களை தேடி வரும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். இளைய சகோதரர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

குலதெய்வ வழிபாடு
சனிபகவானின் 7வது பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுவதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆன்மீக திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள், குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவீர்கள். பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் செய்வீர்கள்.

விபரீத ராஜயோகம்
சனிபகவானின் பத்தாவது பார்வையால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். தொழிலில் வியாபாரத்தில் செய்யும் முதலீகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பல வழிகளில் பணம் வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். உடலில் அசதி அதிகரிக்கும் உணவு விசயத்தில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications