சனி பெயர்ச்சி பலன் 2023: கர்ம காரகன் சனி பகவான்.. கோடி கோடியாக யாருக்கு செல்வத்தை அள்ளித் தருவார்
சென்னை: சனி பகவான் தொழில் காரகன் கர்ம காரகன் ஜீவன காரகன். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிலையில் பயணம் செய்கிறார். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் தொழிலில் வியாபாரத்தில் லாபம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
கும்ப ராசியில் இருக்கும் சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். இந்த சஞ்சாரம் பார்வையால் யாருக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். சனி வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வருகிறது. சனி பகவான் சிலருக்கு கோடீஸ்வர யோகத்தை அள்ளித்தரப்போகிறார்.

லாபம் தரும் சனி பகவான்: மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தை தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக இருந்தால் பணத்தை நன்றாக சேமிக்கலாம். லாப ஸ்தானதாதிபதி லாப ஸ்தானத்திலேயே வக்ர நிலையில் பயணம் செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு கோடி கோடியாக செல்வத்தை அள்ளித்தரப்போகிறார் சனிபகவான்.
ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும். காரணம் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். தன யோகம் அதிகம் கிடைக்கும். சுப யோகர் சனி. காரணம் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி வருவது நன்மையான பலன்களைத் தரும். கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது. சனி பகவான் வக்ரமடைவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்: சனி எப்பவுமே உங்களுக்கு தீமை செய்ய மாட்டார். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய செயலை தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார் கொடுத்து கெடுப்பார். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும்.
சிம்மம்: ஏழாம் வீட்டில் வக்ரமடையும் கண்டச்சனியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் தொழில் விட்டுக்கொடுத்து போகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை சச்சரவு வரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்கும். கன்னி ராசிக்கு ஆறாம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் சனியால் நன்மைகளே நடைபெறும். பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் நன்மைகள் நடைபெறும்.
தைரியம் தன்னம்பிக்கை: துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சனியால் வருமானம் இரட்டிப்பாகும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியோட தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது. உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது இனி சிக்கல்கள் தீரும். காரணம் சனி மூன்றாம் வீட்டுக்கு மாறுவதால் தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும் வீடு நிலம் வாங்கலாம்.
யோகம் தரும் சனிபகவான்: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடிந்து விட்டது யோக காலம் தொடங்கி விட்டது என்றாலும் சனி பகவான் மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். சொந்த வீட்டிலேயே அமரும் சனி யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார். 2025 வரை சனி பகவான் மூன்றாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.
பரிகாரம்: சனி பகவானால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது அவசியம். சனிக்கிழமை ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களிலும். சனியின் நட்சத்திரமான பூசம், அனுசம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் தயிர்சாதம், வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும். சனிபகவானால் ஏற்படும் வீரியம் குறையும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications