சனி பெயர்ச்சி பலன் 2023: சனி வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் 17ஆம் தேதி வக்ரமடைந்து நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தியடைகிறார். நவ கிரகங்களில் சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனிபகவான் சில மாதங்கள் வக்ரமடைவார். சனி பகவான் தொழில் கர்ம காரகன், நான்கு மாதங்கள் வக்ரமடைவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ஆம் இடத்திற்கு சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். கும்ப ராசியில் தற்போது உள்ள சனிபகவான் சூரியனுக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சனி வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும்.

Sani peyarchi palan 2023: Sani Vakra Peyarchi Thulam,Viruchigam,Dhanusu,Makaram,Kumbam and Meenam

துலாம்

உங்கள் ராசிக்கு சனி பகவான் யோகக்காரகன். வக்ரமடையும் இந்த காலத்தில் சனி பகவானின் பார்வை லாப ஸ்தானத்தில், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலையில் இதுவரை ஏற்பட்டு வந்த இடையூறுகள் நீங்கும். மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். எதிர்பார்க்காத மாற்றத்தை சனி பகவான் தரப்போகிறார். மாணவர்களுக்கு திட்டமிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவினை தவிர்ப்பது நல்லது.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உடலில் இருந்த நோய்கள் தீரும். எந்த ஒரு விசயத்திலும் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் ஏற்பட்ட இடையூறுகள் பிரச்சினைகள் நீங்கும். சனி வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் தீர சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்

சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக கோச்சாரத்தில் பயணம் செய்கிறார். வக்ரமடையும் சனி பகவான் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச மகா யோகம் கிடைக்கப்போகிறது. நான்காம் வீட்டிற்கு அதிபன் ஆட்சி பெற்று பயணம் செய்வது யோகம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் இடையூறுகளை எளிதில் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனி பகவானின் வக்ர பார்வை விழுகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டில் உள்ள தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். பொருளாதார விசயங்கள், பணம் விசயங்களில் குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். வயதானவர்கள் நோய் பாதிப்புகள் குறைய சனிக்கிழமை அனுமனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

உங்களுக்கு சனி தற்போது மூன்றாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ஏழரை சனி முடிந்த நிலையில் சனியின் வக்ர சஞ்சாரத்தினால் கவனமும் நிதானமும் அவசியம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள குரு ராகு மீது சனி பார்வை விழுகிறது. மாணவர்கள் சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். சுப விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை விசயமாக வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்களால் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வது அவசியம். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஏழரை சனி காலத்தில் நிறைய சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். திருமணம் சுப காரியம் தடைகளை தாண்டி நடைபெறும். சனி வக்கிரமாவதால் வீடு நிலம் வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற சனி பகவானை வணங்குங்கள்.

மகரம்

உங்கள் ராசிநாதன் சனி பகவான் தற்போது குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். இந்த வக்ர பெயர்ச்சியால் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்களை சனிபகவான் ஏற்படுத்துவார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். கைக்கு வராத பணம் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வர். மனை, வீடு, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பெரும்பாலான நாட்களில் மவுன விரதம் இருப்பது நல்லது. நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை. சனி வக்ர காலத்தில் பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

சனி உங்கள் ஜென்ம ராசியில் வக்ரமடைகிறார். சனி ராசிக்கு அதிபதி. ஆட்சி பெற்ற சனி பகவான் வக்ரமடைவதால் தள்ளிப் போன சுபகாரியங்கள் மளமளவென நடந்தேறும். வேலையில் பளு கூடும். மன அழுத்தமும் உளைச்சலும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காதீர்கள் பெரிய அளவில் முதலீடுகள் செய்யாதீர்கள். வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும் காலமாகும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனமாக இருப்பது அவசியம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவை. பொறுமையான மனநிலையோடு இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்து விடுங்கள் விநாயகர் வழிபாடு உங்களுக்கு சிக்கல்களை தீர்த்து விடியலைக் கொடுக்கும்.

மீனம்

சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலமான இந்த காலத்தில் சனி பகவான் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்வதால் உங்களுக்கு வரப்போகும் நல்ல விசயங்களை உற்சாகத்தோடு வரவேற்க தயாராகுங்கள். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். வீடு வாங்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். உணவு விசயத்தில் கவனம் தேவை. இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. பாதிப்புகள் குறைய காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+