சனி பெயர்ச்சி பலன் 2023: என்ன செய்யும் ஏழரை சனி? யாருக்கு பாதிப்பு? பரிகாரம் இதுதான்
சென்னை: ஏழரை சனி என்றாலே சில ராசிக்காரர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சனிபகவான் எல்லோரையும் தண்டிப்பதில்லை தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதே நேரத்தில் நல்லவர்களுக்கு அதிக பாதிப்பை தராமல் வாழ்க்கை பாடத்தை உணர வைப்பார். நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி வரப்போகிறது. சில ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்தும் ஏழரை சனியில் இருந்தும் விடுபடப்போகிறார்கள். சனியால் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம், கும்பம்,மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சனி பகவான் ஜனவரி 17ஆம் தேதி தை மாதம் 3ஆம் தேதி செவ்வாய்கிழமை மகர ராசியில் இருந்து தனது சொந்த வீடான கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறை கடைபிடிக்கப்படுவதால் சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி அதாவது பங்குனி மாதம் 15ஆம் தேதி நிகழ உள்ளது. சனி பெயர்ச்சி வந்தாலே பலருக்கும் பயம் வந்து விடும் நேர்மையாக இருப்பவர்கள் சனி பகவானைப் பார்த்து பயப்பட தேவையில்லை.

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
துலாம் பூர்வ புண்ணிய சனி

அர்த்தாஷ்டம சனியால் கடந்த சில ஆண்டுகாலமாக கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. சனிபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்வது சிறப்பு. பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். வேலை இழந்தவர்களுக்கும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும் நல்ல செய்தி சில நாட்களில் வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிக்கலை சந்தித்தவர்களுக்கு இனி உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். சிலருக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாகவே சிரமதிசைதான். ஏழரை சனி ஒருவழியாக முடிந்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் ஜென்ம கேது வந்து குடைச்சல் கொடுத்தார். இப்போது அர்த்தாஷ்ட சனிகாலம் வரப்போகிறது. சனிபகவான் கஷ்டங்களை தருவாரோ என்று பயப்பட வேண்டாம்.
நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சச மகா யோகம் கிடைக்கப்போகிறது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். சனிக்கிழமை கால பைரவரை வணங்க கவலைகள் நீங்கும். கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.
தனுசு வெற்றி சனி

தனுசு ராசிக்காரர்களே.. கடந்த ஏழரை ஆண்டு காலமாகவே நீங்கள் ஏழரை சனியின் பிடியில் சிக்கியிருந்தீர்கள். உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது. காரணம் ஏழரை சனியிடம் இருந்து விடுபடப்போகிறீர்கள். சனி பெயர்ச்சியால் உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப்போகிறது.
நீண்ட நாட்களாக வராத பணம் வீடு தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும். ஏழரை ஆண்டு காலமாக எத்தனையோ துயரங்களை அனுபவித்து சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தராமல் ஏமாற்றியவர்கள் இனி வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கப்போகிறது. நோய் பாதிக்கப்பட்டு உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தரப்போகிறார். மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகும் சனிபகவானால் 2023ஆம் ஆண்டு முதல் வெற்றிகளை மட்டுமே ருசிக்கப்போகிறீர்கள்.
மகரம் பாத சனி

ஜென்ம சனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே.. கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம். காரணம் ஜென்ம சனி விலகி பாத சனியாக தொடரப்போகிறது. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். பாத சனி காலம் என்பதால் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் கொஞ்சம் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் அமரப்போவதால்
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டைகள் சச்சரவுகள் வந்து போகும். இந்த கால கட்டத்தில் யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம். கொடுத்த பணம் வராமல் போக வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும் எனவே பேசும் வார்த்தைகளிலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை. சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கினாலும் அனுமன் சாலிசா பாராயணம் செய்தாலும் சனியால் ஏற்படும் தொல்லைகளிருந்து விடுபடலாம் என்று புராணம் கூறப்படுகிறது.
கும்பம் ஜென்ம சனி

சனி பகவான் உங்கள் ராசியில் அமரப்போகிறார். ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். கும்ப ராசியில் பிறந்த 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். அரசு போட்டி தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள். ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகே திருநாரையூர் என்ற ஊரில் குடும்ப சகிதமாக மேற்கு நோக்கி தன் இரு மனைவிகளுடன் சனிபகவான் காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.
மீனம் விரைய சனி

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை வீட்டில் சேமித்து வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. விரைய சனி காலமாக இருப்பதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. அது தவிர சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது. சனி பகவானல் ஏற்படும் சங்கடங்கள் நீங்குவதற்கு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரருக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து வழிபட்டு மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம் சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications