சனி பெயர்ச்சி பலன் 2023..சனி வக்ரத்தால் விபரீத ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நிகழ உள்ளதாக பஞ்சாங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் சனி பெயர்ச்சி திருக்கணிதப்படி நிகழ்ந்திருந்தாலும் திருநள்ளாறு, குச்சனூர் சனிபகவான் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்க முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். எந்த ராசிக்காரர்களுக்கு என்ன யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது.

Sani peyarchi palan 2023: Who Will get Vibareetha Raja yogam on Sani Vakara Peyarchi

மேஷம்: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி பயணம் செய்வதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். குரு பகவானும் உங்கள் ராசியில் ராகு உடன் இணைந்துள்ளார். வக்ரமடையும் சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து தேடி வரும்.

ரிஷபம்: பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது. நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார்.

மிதுனம்: அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.

கடகம்: அஷ்டமத்து சனிதான் என்றாலும் விபரீத ராஜயோகம் தேடி வரும். கவலைப்பட வேண்டாம். திடீர் பண வருமானத்தை தரப்போகிறார் சனி பகவான். குரு, ராகுவின் பயணம் சாதகமாக இருப்பதால் வேலை தொழிலில் புரமோசன் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களுக்கு வரும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கன்னி: உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து வக்ர நிலையில் பயணம் செய்யப்போவதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. அஷ்டமத்து குருவாக இருப்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். மாணவர்கள் நிறைய மதிப்பெண்களை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலம். விபரீத ராஜயோகத்தை அனுபவிக்கப்போகிறீர்கள்.

தனுசு: உங்களுக்கு சிறப்பான கால கட்டமாக அமைந்துள்ளது. ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்லவைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

மீனம்: உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி சனிபகவான் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். விபரீத ராஜயோக காலமாகும். மனதளவில் நீங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராகி விடுவீர்கள். குரு பகவான் இரண்டாம் வீட்டில் ராகு உடன் பயணம் செய்யும் அதே நேரத்தில் வக்ரமடையும் சனியின் பார்வையும் விழுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சிக்கல்கள் வந்து போகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். ராஜயோகத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+