Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2024: கும்ப ராசியில் அஸ்தமனம்.. மார்ச் மாதம் உதயமாகும் சனி.. திடீர் லக் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அஸ்தமனமாகப் போகிறார். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. மார்ச் மாதம் வரை அஸ்தமன நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி உதயமாவார். சனியின் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி: சனி அஸ்தமனம், சனி பகவான் உதயம் போன்றவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைவார். மார்ச் மாதம் 16ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் போது சனி மீண்டும் உதயமாவார். சனி இருக்கும் இடங்களை விட பார்க்கும் இடத்திற்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்வார்கள். சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். சிலருக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். கும்ப ராசியில் சனியுடன் புதன், சூரியனும் இணைந்து பயணம் செய்யப்போகின்றன.

 Sani Peyarchi palan 2024: Sani Asthamanam to Udayam in Kumbarasi good or bad?Who is affected?


மேஷம்: சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பிப்ரவரியில் அஸ்தமனம் ஆகும் சனி மார்ச் மாதத்தில் உதயமாகும் சமயத்தில் நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் பண வருமானமும் பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். சனிபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டின் மீதும் 8 ஆம் வீடான அஸ்டம ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். பொருளாதார உயர்வும் மன மகிழ்ச்சியும் நிறைந்த காலமாக அமைந்துள்ளது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் கண்டங்கள் விலகும்.

ரிஷபம்: கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானம், தொழில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் ஆண்டு முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யப்போகிறது. சில நேரங்களில் திருப்தியற்ற நிலை உண்டாகும். இலக்குகளை அடைய நிறைய போராட வேண்டும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம். வேலையில் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். தொழில் ஸ்தான சனியால் அலுவலகத்தில் பிரச்சினைகளும் உயர் அதிகரிகளுடனான மோதல் போக்கும் அதிகரிக்கும். மார்ச் மாதம் முதல் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

மிதுனம்: சனி பெயர்ச்சி உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மிகச்சிறந்த தன யோகம் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். பண வருமானம் வந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி: கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். வீடு கட்ட வண்டி வாகனம் வாங்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். ஆறாம் வீட்டு அதிபர் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வது விபரீத ராஜயோகத்தை தரும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்தாலும் சச மகா யோகத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. சகோதரர்கள் விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. சனிபகவானின் பத்தாம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாக நீடிக்கிறது. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். அந்த வேலை கிடைத்த பின்னரே இருக்கும் வேலையை விடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை.

கும்பம்: சனி பகவான் ஜென்ம சனியாக பயணம் செய்கிறார். சிலருக்கு மன அழுத்தம், தடுமாற்றங்கள் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. காரணம் ஏழாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைக்கிறது. நல்ல வரன் அமையும். திருமணத்திற்காக அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்தானது. பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.

மீனம்: மீன ராசிக்காரர்களே..ஏழரை சனி தொடங்கியுள்ளதால் பண விரையங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கடனாக கொடுத்த பணம் திரும்பி வருவது கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+