சனி பெயர்ச்சி பலன் 2024.. சனி பார்வையால் பயமா.. வாழ்க்கையில் அதிரடி மாற்றம்.. வருமானம் குவியும்
சென்னை: சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பார்வை பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வரக்காரணமே சனி பார்க்கும் இடம் பாழ் என்று சொல்வதனால்தான். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவான் அங்கிருந்து மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் பார்வையை பெறும் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனி பார்வை யாருக்கு: சனி பார்த்த இடம் பாழ்.. தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

மேஷம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவானால் லாபமும் பொருள் வரவும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். வெற்றிகரமான தகவல் வரும் பாராட்டுக்கள் குவியும். ஆற்றல் அதிகரிக்கும். சனியின் மூன்றாம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சில அழுத்தங்கள் ஏற்படும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்டதை ஸ்கெட்ச் போட்டு செய்து முடிப்பீர்கள்.
வருமானம் குவியும்: லாப சனியால் வருமானம் குவியும். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் அலைச்சலை கொடுத்து பிரச்சினையை நிவர்த்தி செய்வார். லாபமும் வருமானமும் குவியும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். மூத்த சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். சனி பகவானின் பயணத்தாலும் பார்வையாலும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
சிம்மம்: சனிபகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீடான கும்ப ராசியில் அமர்ந்து தனது ஏழாவது பார்வையால் சிம்ம ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.
அதிரடி மாற்றம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஏழுக்குடையவன் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதால் சச மகா யோகம் தேடி வரும். தடைகள் ஏற்பட்டு பின்னர் திருமணம் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனி பார்வை நேராக ராசியின் மீது விழுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். பயணங்களில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு சனி பகவான் நான்காம் வீட்டிற்கு அதிபதி. நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தை தரும் சனி பகவான் பத்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நீங்கள் நினைத்தது நடக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடியும். ஆட்சிப்பெற்ற சனியின் பார்வையால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றமான மாற்றம், வெளிநாடு பயணம் ஏற்படும். நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு யோகமும் முன்னேற்றமும் அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து சென்று தொழில் செய்வீர்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications