சனி பெயர்ச்சி பலன் 2024: சனி வக்ர பெயர்ச்சி.. யாருக்கு லாபம்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?
மதுரை: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூலை முதல் வக்ரகதியில் பயணம் செய்யப்போகிறார். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்புகளையும் உண்டாக்க வாய்ப்புகள் அதிகம். ஜூலை முதல் நவம்பர் வரை யாருடைய வாழ்க்கையிலெல்லாம் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி வக்ரமடைவதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உல்லாச பயணங்களினால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்.

விருச்சிகம்: ஜூன் மாதம் வக்ரம் அடைய உள்ள சனியால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். கடனாகக் கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தடைகள் நீங்கி வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். பாஸ்போர்ட் , விசா கிடைக்கும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.
தனுசு: ஏழரை சனி முடிந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. கடனாக கொடுத்த பணத்தை திரும்ப தராமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். எதிர்பாராத பண வருமானம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். வாய் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.
மகரம்: ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. ஜூலை முதல் நவம்பர் வரை நான்கு மாத காலம் பிரச்சினைகள் சற்றே குறைந்து நிம்மதி பெருமூச்சு விட வைக்கும். தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். அடுத்தவர்களின் விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவைப்படும்.
கும்பம்: தலைமேல் அமர்ந்த சனி வக்ரமடைகிறது. ஜென்ம சனி காலம் நெருக்கடி மிகுந்த கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்கள். புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் முடிவுக்கு வரப்போகிறது.
மீனம்: உங்களுக்கு ஏழரை சனி காலமாக இருக்கிறது. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் மனதில் மகிழ்ச்சியும் உடலில் உற்சாகமும் அதிகரிக்கும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள் நல்லதே நடைபெறும்.












Click it and Unblock the Notifications