Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2024.. தை பிறந்தால் வழி பிறக்கும்.. செல்வ வளத்தோடு குபேரன் ஆகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு மிக பிரம்மாண்ட ராஜ யோகத்தை தரப்போகிறார்.

சனி பகவான் தொழில் வருமான காரகன். கர்ம காரகன். கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான் கோடீஸ்வர யோகத்தையும் ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய யோகத்தையும் தரப்போகிறார். யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

Sani Peyarchi Palan Tamil: Four Zodiac signs born people get jackpot from the Tamil month of Thai

மேஷம்: மேஷ ராசிக்காரர்களே.. சனி பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் 2024ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு வருமானத்தை அள்ளித்தரப்போகிறார் சனிபகவான். இரண்டரை ஆண்டுகள் உங்கள் காட்டில் பணமழை பொழியப்போகிறது. நீங்கதான் இனி ராஜா. தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் எல்லாம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. ஏதோ ஒரு வகையில் பணம் தேடி வரும். இடம் வாங்குவீர்கள். வீடு வாங்குவீர்கள். பிரபலமானவராக மாறப்போகிறீர்கள். உங்களுக்கு பழைய கடன்கள் எல்லாம் அடையும். வீடு கட்டுவதற்கும் நிலம் வாங்குவதற்கும் எதிர்பார்த்த கடன் வந்து சேரும். பலருக்கும் உதவி செய்யும் அளவிற்கு பணம் தேடி வரும். சிவ ஆலயங்களில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள். பாலபிஷேம் செய்து வழிபடுங்கள்.

மிதுனம்: கண்டச்சனி, அஷ்டமச்சனி பிடியில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் சனி பகவானால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் இருந்து கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. சனிபகவானால் தெய்வ பலம் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி விட்டு தர்பாரண்யேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து சனிபகவானை தரிசனம் செய்து விட்டு வருவது நன்மையைத் தரும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் 2024 ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாக நீங்குவதற்கான அறிகுறிகள் இப்போதே உங்களுக்கு தென்படும். நீங்கள் மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள். கடனுக்காக அடகு வைத்த நகையை மீட்பீர்கள். பெண்கள் இந்த ஆண்டு நிறைய நகை வாங்குவீர்கள். அரசியவாதிகளுக்கு பதவியும் புகழும் தேடி வரும். சனிபகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். வரப்போகும் யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் யோகமும் ஞானமும் தேடி வரப்போகிறது. கடந்த ஏழரை ஆண்டு காலமாக உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான் விலகி விட்டதால் 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு எல்லாம் ஜெயமே... நீங்கள் நினைத்தது நிறைவேறப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது. சனிபகவானுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் கருங்குவளை மலர்கள் சாற்றி சனிபகவானை வழிபடுங்கள். இதுநாள் வரை உங்களை சங்கடப்படுத்திய சனிபகவான் 2024ஆம் ஆண்டு முதல் அள்ளித்தரப்போகிறார். அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+