Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்: சனி தரும் சச யோகம்.. தீபாவளிக்குப் பின் யாருடைய வாழ்க்கையில் திருப்புமுனை வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் வக்ரநிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையப்போகிறார். சனி பெயர்ச்சி திருக்கணிதப்படி நிகழ்ந்திருந்தாலும் வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு சச மகா யோகமும் ராஜயோகமும் கிடைக்கப்போகிறது. தீபாவளிக்கு முன்பாக யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி பலன்: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். கும்ப ராசி சனிபகவானின் மூலத்திரிகோணராசி. கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு எதிர்பாராத ராஜ யோகத்தை தரப்போகிறார்.

Sani peyarchi palangal 2023: Sani vakra nivarthi Who will get Sasha yogam good job and promotion

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். குரு பகவானும் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். ராகு கேதுவும் இப்போது சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.

ரிஷபம்: சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து தேடி வரும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஏழாவது வீட்டில் சனி பகவான் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலம் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி பகவான் தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச யோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம். பிசினஸ் செய்பவர்களுக்கு இது செழிப்பான காலம். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். சனி பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அர்த்தாஷ்டம சனி என்றாலும் அஞ்ச வேண்டாம். சசமகா யோகம் தரப்போகும் சனிபகவான் உங்களுக்கு சொத்து சுகங்களை தரப்போகிறார். சனி பகவான் அள்ளிக்கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

தனுசு: இதுநாள் வரை இருந்த ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் சிறப்பான கால கட்டமாக அமைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்லவைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

கும்பம்: ஜென்ம சனிதான் என்றாலும் சனி பகவான் உங்கள் ஆட்சி நாதன். எத்தனையோ சிரமங்கள் பட்டாலும் அதை எல்லாம் சமாளிக்கும் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சனி பகவான் தந்து கொண்டிருக்கிறார். உங்களுடைய வேலையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் முன்னேற்றத்தையும் சனி பகவான் தரப்போகிறார். நோய்கள் நீங்கும். உடல் ரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் ஒன்று சேருவார்கள். ஜென்ம ராசியில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் சச மகா யோகத்தை தரப்போகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+