Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: புகழின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள்..விபரீத ராஜயோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் கால புருஷ தத்துவப்படி தொழில் ஸ்தான அதிபதி, லாப ஸ்தான அதிபதி. சனிபகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு நல்ல வேலை, தொழில் வியாபாரம் அமையும். செய்யும் தொழிலில் லாபமும் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஜூன் 17ஆம் தேதி சனிபகவான் வக்ரமடைகிறார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தியடைவார். சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. அந்த அதிஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

சனிபகவான் பார்வை: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம்,சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவான் பயணம் செய்யும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பாழ் என்று சொல்வார்கள். ஆனால் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான் பாதிப்புகளை தர மாட்டார் மாறாக சில ராசிக்காரர்களை புகழின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறார்.

லாப சனி : மேஷம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் இந்த காலத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். குரு பகவானும் ராசியில் பயணம் செய்கிறார். குருபகவானின் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ராகு கேதுவும் இப்போது சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து தேடி வரும். சனிபகவான் பார்வை உங்கள் ராசியின் மீதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது, எட்டாவது வீட்டின் மீதும் விழுவதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.

தொழில் சனி: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் வளர்ச்சியடைவீர்கள். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியின் பார்வை ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான நேரம் கூடி வந்துள்ளது.
பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி பகவான் சச யோகத்தை தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது. நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார்.

பாக்ய சனி: மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் தொடங்குகிறது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். குரு பகவானும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராகு பகவானும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பான கால கட்டம். சனி பகவான் உங்களுக்கு மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனி பகவானின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். தூரதேச பிரயாணம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம ஸ்தான சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.

Sani peyarchi palangal 2023: These 5 zodiac signs get good job and business

ருண ரோக சத்ரு சனி: கன்னி ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த கால கட்டம் பொன்னான காலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே காணோம் என்று சொல்லும் அளவிற்கு தொல்லை ஒழியும் முழு அதிகாரத்தையும் சனிபகவான் தருவார். ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் விபரீத ராஜயோகத்தையும் தருவார். கடன் நோய் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். தொட்டது துலங்கும் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். வியாபாரிகளுக்கு இது செழிப்பான காலம். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

வெற்றி சனி: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டது. பூர்வ புண்ணிய குரு, ராகு, லாப கேது என பிற கிரகங்களின் பயணமும் சிறப்பாக உள்ளது. மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவான் வெற்றிகளைத் தரப்போகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு முழுமையான ராஜயோகம் தேடி வரப்போகிறது. இது நாள் வரை கஷ்டங்களை அனுபவித்தவர்கள் இனி நல்ல விசயங்களை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமணம், சுப காரியங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+