Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்.. முதல்வர் யோகம் யாருக்கு
சனிப்பெயர்ச்சி 2026: 2026 வருடத்தின் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜோதிட ரீதியாகவும் இது முக்கியமான நேரம். சனி பகவான் கடந்த 6.3.2026 தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சனி பகவானை போல கொடுப்பாரும் இல்லை, சனி பகவானை போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். சனி, குரு பகவானை தவிர மற்ற கிரகங்கள் எல்லாமே கும்பத்தில் பயணிக்கிறார்கள். இது வருகிற தேர்தலில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் காணலாம்.
தேர்தல் காலகட்டம். அதனால் சனிப்பெயர்ச்சி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன், செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களை ராஜ கிரகங்கள் என்பார்கள். இந்த 3 கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் சனி, ராகு, கேதுவுடன் இணைந்தால் கூட்டணியில் பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் பகவான் ஏப்ரல் மாதம் வரை கும்பம் ராசியில் பயணிக்க போகிறார். இதனால் அரசியலில் குழப்பங்கள் ஏற்படும். பேரங்கள், விரிசல் விலகுவது போன்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள்.

சனிப்பெயர்ச்சி அரசியல் தாக்கம்
அரசியல் கட்சிகளின் கூட்டணியில் திடீர் டிவிஸ்ட்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே கூட்டணி அமைத்திருப்பவர்கள் கடைசி நேரத்தில் திடீரென கூட்டணி மாறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வரை இந்த நிலை தொடரவே வாய்ப்புள்ளது. அதுவரை நிலைக்கும் கூட்டணி வெற்றிக் கோட்டை எட்டுவார்கள்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சிம்மம் ராசி. அவருக்கு எட்டாம் இடத்தில் சனி அமர்ந்துள்ளார். அதாவது ஸ்டாலினுக்கு அஷ்டம சனி நிலவுகிறது. அதேநேரத்தில் 11 வது இடத்தில் குரு பகவான் இருப்பது மிகவும் சாதகமான அமைப்பாகும். அவர் அங்கிருந்து 3 ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தை பார்க்கிறார். அவர் சரியாக திட்டமிட்டு ஒரு முயற்சியை செய்தால் பிரம்மாண்ட வெற்றி வசமாகும்.
திமுக டபுள் இன்ஜின்
உதயநிதி ஜாதகம் பவர்புல்லாக உள்ளது. இந்த டபுள் இன்ஜின் தாக்கம் திமுகவுக்கு பெரிய பிளஸ். ஸ்டாலின் ஜாதகத்தில் உள்ள குறைகளை உதயநிதி ஜாதகம் சரி கட்டிவிடும். ஊர்கூடி தேர் இழுப்பது எப்போதுமே சிறப்பானது. அதேபோல திமுகவின் வெற்றிக்கு கூட்டணி கணக்கு முக்கியமான காரணியாக இருக்கும். கூட்டணியில் சொதப்பாமல் இருந்தாலே திமுகவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
எடப்பாடிக்கு இறங்கு முகம்
அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமிக்கு கன்னி ராசி. அவரின் ஏழாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார். இதை கண்டக சனி என்பார்கள். அஷ்டம சனியை விட கண்ட சனியில் பாதிப்பு அதிகமாக இருக்கும். சனி பகவான் பார்வை நேரடியாக விழுவதால் இது சற்று பாதிப்பை ஏற்படுத்தும். குரு பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதும் சாதகமான அமைப்பு இல்லை. கூட்டணி மற்றும் உள்கட்சி பிரச்சனைகளில் கோட்டை விட்டால் எடப்பாடி பழனிசாமி கோட்டையை பிடிப்பது கடினமாகிவிடும்.
விஜய்க்கு ஹேப்பி நியூஸ்
தவெக தலைவர் விஜய்க்கு கடகம் ராசி. இதுநாள் வரை கடக ராசிக்கு அஷ்டம சனியான எட்டாம் இடத்தில் இருந்தார். பொதுவாக சனி எட்டாம் இடத்தில் இருக்கும்போது கஷ்டத்தை அனுபவிப்பார்கள். விஜய் கரூரில் அந்த கஷ்டத்தை அனுபவித்துவிட்டார். கட்சியால் அவமானத்தையும் சந்தித்துவிட்டார். இப்போது சனி பகவான் அஷ்டமத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். ஜாதக ரீதியாக விஜய்க்கு இந்த சனிப்பெயர்ச்சி வெற்றியை கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் போட்டியை சுவராஸ்யபடுத்துவதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications