சனிப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு இனி நல்ல நேரம் ஸ்டார்ட்.. தொட்டதெல்லாம் லாபமாக மாறும் பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்: துலாம் ராசியினருக்கு உங்களின் ஆறாம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். சனி பகவானுக்கு மிகவும் பிடித்த இடம் என்று இந்த அமைப்பை கூறுவார்கள். அவ்வளவு நல்ல பலன்களை தரக்கூடியது. உடல் நலத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் கூட விலகி இக்காலத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

Sani peyarchi Thulam

கல்வியில் மிக சிறப்பான முன்னேற்றம் இருக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு முயற்சி செய்பவர்களாக இருந்தால், இந்த நேரத்தில் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் சிறிய முயற்சிக்கு கூட பெரியளவு வெற்றி கிடைக்கும்.

இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். தொழிலும் நல்ல ஏற்றம் காணப்படும். உங்களின் எதிரிகள், போட்டியாளர்கள் இந்த காலத்தில் உங்களிடம் தோல்வியை சந்திப்பார்கள். எல்லாவற்றிலும் உங்களின் வலிமை அதிகரிக்கும். தொழில் ஏற்றம் கொடுக்க கூடிய திறன்மிக்க ஊழியர்கள் அமைவார்கள்.

கடன் சுமை குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக உள்ள மனக்கவலைகள் நீங்கும். மன நிம்மதி, ஓய்வு, நல்ல தூக்கம் கிடைக்கும். தொழிலில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடு பல மடங்கு லாபமாக மாறும்.

வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு இந்த காலம் சிறப்பான வளர்ச்சியை கொடுக்கும். கால்நடை சம்பந்தப்பட்ட தொழில் உள்ள விவசாயிகள், தொழில் முனைவோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டு.

கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்படும். வீண் விவாதத்தை தவிர்க்கவும். சந்தேக எண்ணம் அதிகரிக்கும். நியாபக மறதி அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டிங், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உணவுப் பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+