சனிப்பெயர்ச்சி: கன்னிக்கு கண்டக சனி ஆரம்பம்.. பண மழையில் நீச்சலடிப்பீங்க.. ஒரு விஷயத்தில் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Kanni

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஆறாம் இடத்தில் இருந்த சனி 7 ஆம் இடத்துக்குப் போகிறார். கண்டகச் சனி ஆரம்பமாகப் போகிறது. திருநள்ளாறுக்குச் சென்று சுவாமியை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நல்லெண்ணெய், பசு நெய், விபூதி, திருநீறு வைத்து வழிபட்டு, திருநீறு குங்குமத்தை வீட்டுக்கு எடுத்து வந்து தினமும் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். சிவன் சனியின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பார். அவ்வளவு அனுகூலம் கிடைக்கும்.

அலர்ஜி, ஹார்மோன் தொந்தரவு, தும்மல், காது மூக்கு தொண்டை பிரச்சனைகள், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் உள்ள பிரச்சனைகளை ஜூன் மாதத்துக்குள் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் தொழிலில் இருந்து நம்மை மாற்றிவிடும் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவன் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தோடு தொலைதூரம் பயணம் செய்தால் கண்டிப்பாக தேங்காய் உடைத்துவிட்டு கிளம்ப வேண்டும். கணவன், மனைவிக்குள் சண்டை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. கன்னி ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி பிரச்சனை தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் கவனமாக இருக்க வேண்டும். தனம், வாக்கு, குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். தாய் தந்தை வழி உறவு ஏற்றம் பெறும். பழைய கடன்களை கட்டி முடிக்கும் யோகம் ஏற்படும். அந்த அளவுக்கு பண வரவு உண்டாகும்.

வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் உடன் பணியாற்றுபவர்களால் உங்களுக்கு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. தைரியம் அதிகரிக்கும். சத்ருக்களில் இருந்து வந்த பிரச்சனைகளில் நிவர்த்தி ஏற்படும். ஜென்மத்தில் இருந்து கேது விலகுவதால் படபடப்புகள் குறையும். ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வகையில் செல்வாக்கு உண்டாகும். புதிய தொழில், இடமாற்றங்கள், கூட்டுத் தொழில் இருந்து தனித் தொழில் தொடங்குவது, பதவி உயர்வு போன்றவை உண்டாகும்.

ஜூன் மாதத்துக்குள் தொழில், வேலையில் நல்ல ஒரு முடிவெடுப்பது அனுகூலமான பலன்களைத் தரும். சீக்கிரமாக முடிவுகளை எடுப்பது நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் உண்டாக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+