சனிப்பெயர்ச்சி: மீனத்துக்கு அள்ளிக் கொடுக்கும் சனீஸ்வரர்.. பணம், வீடு, செல்வம் யோகம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். குருவின் வீடு மீனம். உங்க வீட்டுக்கு சனீஸ்வரர் வருவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உடற்பயிற்சி தினந்தோறும் செய்ய வேண்டும். தினந்தோறும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். இதன் மூலம் மனத் தெளிவு பெறுவீர்கள். சனியால் ஏற்பட்ட மந்தம் மாறும். புத்துணர்வு ஏற்படும். உள் இருக்கும் உறுப்புகளுக்கு எல்லாம் நிம்மதி உண்டாகும்.
மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். குரு 4 ஆம் இடத்தில் கேந்திரவித்திய தோஷம் இருந்தாலும் 10, 12, 8 ஆம் இடத்தை பார்ப்பதால் நாள்பட்ட தேக ஆரோக்கியம் நீங்கும். நோய்களில் இருந்து குணமடைவீர்கள். வண்டி, வாகனத்தில் இருக்கும் பிரச்சனைகளை மாற்றுவது நல்லது.
அடிமைத் தொழிலில் இருந்து சுயதொழில் செய்யும் யோகம் உண்டாகும். நிறைய நகைகள் வாங்கும் யோகம், வீடு, நிலம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். நிறைய பணத்தை முதலீடு செய்வீர்கள். 6 ஆம் இடத்தில் கேது, 12 இல் ராகு திடீர் பண வரவு, அதிர்ஷ்டம், செல்வாக்கு உண்டாகும். தெய்வ காரியங்கள் செய்வீர்கள், அன்னதானம் செய்வது, கோயில் கட்டுவது, திருப்பணிகள் செய்வது, அன்னதானம் செய்வது, பசுக் கூடங்களுக்கு உதவுவது, வாயில் ஜீவ ராசிகளை வீட்டில் வளர்க்கும் யோகம் உண்டாகும்.
மலைப் பிரதேசங்களில் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீடு வாங்குவீர்கள். ஆச்சரிய நன்மைகள், சந்தோஷமான அமைப்பு, மிகப்பெரிய வளர்ச்சி, மாற்றம், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த அழுத்தங்கள் குறையும். கெளரவம் ஏற்படும். அரசு அமைப்பு உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications